Translate

Showing posts with label கற்பனையில் காணாதே. Show all posts
Showing posts with label கற்பனையில் காணாதே. Show all posts

Monday, September 4, 2017

கற்பனையில் காணாதே

உல்லாச வாழ்க்கையினி
முடிந்துத்தான் போனதடா.
ஒரு போதும் மீண்டது
வரப் போவதில்லையடா.
அன்றொரு நாள் தொடங்கியது
முடிவில் தான் முடியுமடா.
வேதனையில் இரு விளிம்பும்
பிரிந்துத்தான் கிடக்குதடா.
நேர்கோடாய் அதுவின்றி
கோணல்களாய் போனதடா.
ஒட்டத்தான் பார்த்தாலும்
பிசுறுகளாய் உறுத்துதடா.
பிம்பங்களோ தலைகீழாய்
எதிரொளித்து மிரட்டுதடா.
பகலின்றி இரவு போல்
ஔியன்றி தெரியுதடா.
அறிவற்ற மூடன் போல
அறிந்திருந்தும் தவிக்குதடா.
உணர்வுகளோ உடலெங்கும்
ஊர்ந்தது எரிக்குதடா.
எண்ணெயில்லா திரி விளக்காய்
கருகிக் கொண்டிருக்குதடா.
கருத்தின்றி நினைவுகளோ
கடுகி எங்கோ செல்லுதடா.
கற்பனையில் காணாதே
ஒப்பிட்டு எனையுமடா.