Translate

Monday, June 30, 2008

எங்கள் தாயோ தசலட்சுமி !

எங்கள் பரம்பரையில், ஓர்படியாக-
இவரொரு தனலட்சுமி.

எங்களை ஈன்றெடுத்த
இவர் சந்தானலட்சுமி.

பகிர்துண்ணும் பழக்கத்தை
வளர்த்த தான்யலட்சுமி.

அன்பான அறவணைப்பில்,
ராஜலட்சுமி.

அறிவுக்கண்களை
திறக்க வைத்த வித்யாலட்சுமி.

உடல் பிணியால் மனம்-
தளரா தைரியலட்சுமி.

வாழ்க்கை சாகரத்தை
வென்ற விஜயலட்சுமி.

அனைவரையும் கவர்ந்த
சௌபாக்யலட்சுமி.

எமது தந்தைக்கு அவரே
பாக்யலட்சுமி.

என்றென்றும் எங்கள்
நினைவில் மகாலட்சுமி.

பின்குறிப்பு:::
எங்கள் தாய் இப்புவுலகை விட்டு இறைவனடி அடைந்த சமயத்தில் எழுதிய இக்கவிதையை, அவர் நினைவுநாளில் உங்கள் முன் சமர்பித்திருக்கிறேன்

Friday, June 27, 2008

நாள் ஒன்றிலே !....

நிலையாய் நினைவிலே
நில்லுங்களேன் நினைவுகளே.

செய்யும் செயலை
செம்மையாய் செய்திடவே.

வந்தது வரட்டுமென
வருவதை வரவேற்று,

நல்லது நடக்க
நலமதை நவில்வோம்.

எது என்று
எனை எண்ணியே,

ஏன் ஏங்கினேன்,
ஏதுமில்லா ஏமாற்றத்திற்கு.

அதுயென்று, அதற்கென்று
அலைந்தேன் அனைத்துக்குமே.

ஆகையால் ஆட்பட்டு-
ஆடினேன் ஆனந்தமில்லாமலே.

ஓராயிரம் ஓரங்களில்
ஓடிய ஓடம்,

ஒதுங்குமே ஒன்றுமில்லா-
ஒப்பனைகளாய் ஒரு புறத்திலே.

Sunday, June 15, 2008

முதல் சந்திப்பு !!!

சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க முன்னாள் தலைவரும் , எமது நண்பருமான, இறைவனடி சேர்ந்த திரு.A. இராமசந்திரன் அவர்களின் நினைவிற்கோர் அஞ்சலி இது.
மறைவு நாள் 16/ 06/ 2007
நினைவு நாள் 16 /06 /2008
***********************

இப்புவிதனிலே !

தேனீர் கொடுத்து

வரவேற்ற

நண்பா !!

எதைக் கொடுத்து

வரவேற்பாய்

வானுலகிலே !!!

நினைவுகளை அசைப்போடும் நண்பன்,
A.M.பத்ரி நாராயணன்

Sunday, June 8, 2008

அழைத்துக் கொண்ட அழிவு.

அழகுயென்றே அணைத்துக் கொண்டேன்.

அரவமென பின்பே அறிந்துக் கொண்டேன்.

ஏனோ உதறித் தள்ளாமல், அதையே

என்னுடன் சுற்றிக் கொண்டேன்.

கக்கிய நஞ்சினை அறியாமல்,

அமிர்தமென நினைத்தே பூசிக்கொண்டேன்.

விடிந்ததும் உணர்வுகள் விழித்துக் கொள்ளும்,

உண்மை நிலையை அறிந்துக் கொள்ளும்.

நாளும் பொழுதும் கழிந்தாலும்,

நஞ்சின் வீரியம் குறையவில்லை.

படர்ந்த நஞ்சின் தன்மையினால்,

அழிவை நானே அழைத்துக் கொண்டேன்.

எப்படி சொல்ல........

என்ன,எப்படி சொல்வது எனத் தெரியவில்லை.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறேன்.

தடங்களின்றி பதிவுகள் தொடர, இறைவனை

வேண்டிக் கொண்டுத் தொடர்கிறேன்.