Translate

Showing posts with label பூமி அதிர்ச்சி. Show all posts
Showing posts with label பூமி அதிர்ச்சி. Show all posts

Sunday, August 24, 2014

பூமி அதிர்ச்சி. - இன்றொரு தகவல்



அமெரிக்காவில் கலிபோர்னியா நாபா என்னுமிடத்தில் ஞாயிறு விடியற்காலை 3.10 மணிக்கு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுபடி 6.1 புள்ளியும், 11 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாங்களும் அதிர்வை உணர்ந்து அலறி புடித்து எழுந்தோம். சிறிது நேரம் நீடித்தது. நன்கு உணரமுடிந்தது.

காலையில் தொலைக்காட்சி செய்தி மூலம் பாதிப்புகளை அறிய முடிந்தது. 90க்கு மேலானோர் காயங்களும், முவ்வர் பலத்த காயமும் அடைந்ததுடன், வீடுகள், சாலைகள் பழுதடைந்துள்ளதை கண்டோம். மனம் வேதனையடைந்தது. 

. 25 ஆண்டுகளுக்கு பின் ஏற்ப்பட்ட  பெரிய புவியதிர்ச்சி. மீண்டும் ஒரு வாரத்திற்குள் புவியதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு என்பதும் செய்தி. இனியும் பாதிப்பு வராமலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து, நிவாரணம் அடையவும் இறைவனை பிரார்த்தித்தோம். நண்பர்களையும் உறவுகளையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.