உழைப்பின்
மேன்மைக் காட்டும் பயிர் வகைகள்,
காற்றினிலே
அசைந்தாடும் செந்நெல் கதிர்கள்
உழவுக்கு
உயிர்நாடி உன்னத பசு வகைகள்
உயிருக்கு
உயிர் நாடி விளைந்த நற்பயிர்கள்
ஐம்பொன்
பூதங்களை வணங்கி நாம்
தகதகக்கும்
செஞ்ஞாயிறு ஒளியினிலே
வேர்வை
சிந்தும் விவசாயி உடல் மினுக்க,
உழைத்த
உத்தமனாம் உழவனைப் போற்றிடுவோம்.
இனிதான
இந்நாளில், சிறந்ததொரு பொன்னாளில்
உடனுழைத்த
அனைவருக்கும், அனைத்துக்கும்,
-தவப்புதல்வன்
13/01/2013