Translate

Showing posts with label காதல் துரோகம். Show all posts
Showing posts with label காதல் துரோகம். Show all posts

Saturday, January 27, 2018

காதல் துரோகம்


வகுத்திருந்த என் வாழ்வை
வதைத்து விட்டாய் உன் செயலால்
வலிய வந்தாய் என் வழியில்
வாலிபத்தை வலையிட்டாய்

ஊர் சுற்றி வந்தாலும் - நான்
பெண்களை சுற்றியதில்லை.
கேலிகளோ எங்களுக்குள்
கேட்பதற்கு ஆட்களின்றி.

மரத்தடியில் எங்கள் வாசம்
மாற செய்ததே உன் வாசம்.
மாறி வந்தேன் நட்பை மறந்து
மறந்து போனாய் காதல் செய்து.

தவிக்கவிட்டு போனதினால்
தனிமையில் நானுறைந்தேன்.
தேர்ந்தவளாய் நீயிருக்க

தேடி வர விரும்பவில்லை.