Translate

Showing posts with label வெந்து மடிந்ந்திடாமல். Show all posts
Showing posts with label வெந்து மடிந்ந்திடாமல். Show all posts

Tuesday, April 17, 2018

வெந்து மடிந்ந்திடாமல்





சோதனையிலும் சோதனையம்மா.
காதலில் இது போதனையம்மா.
கனவிலே நீ மூழ்கியிருக்க,
கொள்ளையடித்தாள் வேறொருத்தி. 10

காதலுக்கு கவிதை பாடும்
கன்னிகளாய் நீங்களிருவர்.
களவாடும் வேடனாய்
இசைக்கிறான்
உங்கள் உணர்வுகளை 20

அவளும் ஒரு நாள் நிர்கதியாய்
நிற்கும் காலம் வரலாமம்மா.
உன்னை அணைத்தபடி இருக்கும் போதே
வேறிடத்தில்
மனம் இழக்கின்ற
இவன்
காதலனல்ல கள்வனம்மா. 37

உணர்வுகளை கிளறி,
உடலை கவர,
உள்ளத்தை மயக்கும்,
பசு தோல் போர்த்திய புலியம்மா. 47

காதலெனும் மயக்கம்
காலத்தில் துளிர்க்கும்.
கற்புக்கு சேதமின்றி
காப்பது உன் திறமையம்மா. 56


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.🙏