Translate

Showing posts with label வரதட்சனை. Show all posts
Showing posts with label வரதட்சனை. Show all posts

Thursday, December 28, 2017

வரதட்சனை

தொடக்கமென ஒன்றிருக்க
தொடர்கிறது இன்று வரை.
தட்சனைகள் பல விதம்
வரதட்சனை அதிலொரு விதம்.

கொடுத்தலும் பெறுதலும் மாறி போக,
பெறுதலொன்றே நிரந்தரமாய் நிலைத்து போக,
இனமிரண்டும் துணையின்றி காத்திருக்க,
கன்னியினம் மட்டும் கண்ணீர் சிந்த,

பெண்ணுக்கு பெண்ணே எதிரியம்மா
அதையிங்கு உரைத்தால்
பலருக்கு உதறலம்மா.

பெண்மகவை ஈன்றாலோ
ஒப்பாரி இடுகின்றார்
ஆண்மகவை பெற்றாலோ
அமுக்கமாய் மகிழ்கின்றார்.

பெண்ணுக்கு கைமாற்றாய்
கொடுத்துதான் பெற வேண்டும்.
இப்படியும் சிறு நிலை
இன்றும் இங்கு இருக்குதம்மா.

மாமியாரும் படியேறி வந்தவளே.
அதை மறந்தாளே
மாட்டுப்பொண் வந்தவுடன்,
குடும்பத்தை இதிலே ஒன்றிணைத்து
முன்னின்று வதைப்பதும் அவள்தானே.

ஆக்கலிலும் அழித்தலிலும் பெண்ணிருக்க,
கொடுமையில் பெண்ணின்றி ஆண் சுமக்க,
கொடுமையின் உச்சம் காண்கின்றாள்
படியேறி வந்தது முதற்கொண்டு.

பெற்றவர்கள் பாசத்தினால் பரிதவிக்க
பத்து பணம் போனாலும்
பெற்ற மகள் மகிழ்ந்திருக்க,
தன் கை சுட்டாலும்
பொறுமையாக
அள்ளி அவர் கொடுக்கின்றார்.

ஆண் மகவு உடனிருந்தால்
அத்தனையும் அள்ளி விடலாம்
அவர்களின் கணக்கோ இப்படியிருக்க.
நிற்குமோ புவி நனையும் விழிநீர்?

பெண்ணினம் நினைத்தாலன்றி
இந்நிலை மாறாதம்மா..
என்றவர் உணர்வரோ,
இறைவனின்றி யாரரிவார்.

ஆணின்றி பெண்ணவளே கரு சுமக்கும்
விஞ்ஞான புரட்சி தொடக்கமம்மா.
அன்று இந்நிலை மாறுமோ?
மாற்றங்கொண்டு தொடருமோ?
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நராயணன்.

#வாழ்த்துகள் குழுவின் 200வது நாளை கொண்டாடும் விதத்தில், இன்றைய சிறப்பு கவிதை 28\12\2017