Translate

Showing posts with label திருமண வாழ்த்து. Show all posts
Showing posts with label திருமண வாழ்த்து. Show all posts

Sunday, October 16, 2011

இணைந்த உள்ளங்களுக்கு திருமண வாழ்த்து.




மணமகள்:- சௌ.சரண்யா மணமகன்:- S.K.விக்னேஷ்குமார்
மணநாள்: 30-09-2011 வெள்ளிக்கிழமை.
இடம்:- ஸ்ரீ வாசவி மஹால், நாமக்கல்.

இறைவனின் அருளால் இன்றைய நிகழ்ச்சி
இருமனம் இணையும் இல்லறத்தின் முதல் நாள்.

சங்குக்கழுத்து உடையவளோ
சந்தித்த நொடிப்பொழுதே
சந்தோச மனமுடனே
சம்மதித்து தலையசைத்தாள்
சரஸ்வதியின் பெண்ணிவள்.
தோழியர் புடைசூழ,
தொகைமயிலாய் மங்கையிவள்
அன்னம் போல நடைப்பயில
மங்கையிவளைக் கரம் பிடிக்க
மாப்பிள்ளையாய் உருவெடுத்து
மது உண்ட வண்டாக
மங்கை நினைவில் அவனிருந்தான்.

அரங்கம் முழுதும் அலங்கரித்து
சாத்திரங்கள் முடிவு செய்து
சான்றோர் அவை முன்னிருக்க
சரண்யாவைக் கைப்பிடித்தான்
சாகரத்தில் முத்தெடுக்க.

பட்டாபியின் மகளிவளோ
மங்கலக் குரலோசை
மண்டபத்தில் எதிரொலிக்க
பட்டமதைப் பெற்றுக் கொண்டு
மகாராணி ஆனாளே
மங்கள நாண் பூட்டிக் கொண்டு.

விக்னேஸ்வரனின் அருளுடனே
விக்னேஷ்குமார் துணையுடனே
வாழ்க்கைக்கடலை சிறப்பாக
வாசமடைய செய்வாளே.

பலமான உறவுகள்
பாலமாய் விளங்க,
சான்றோர் வாக்குகள்
வாழ்விலே பலிக்க,
இனிதான நினைவுகள்
விசாலமாய் படர,
நலமும் மகிழ்வும்
வளமுடன் இணைந்து,
பேரும் புகழும்
நிலையாய் உயர,

வாழ்த்துக்கள் எல்லாம் உரமாக,
வாழ்க்கை முழுதும் சிறப்பாக,
வாழ வேண்டும் செழிப்பாக,
வாழ்த்தினோம் நிறைவாக.

அன்புடன்,
மாமா தவபபுதல்வன் @ A.M.பத்ரிநாராயணன்,
மற்றும்,
தாத்தா P.A.மாணிக்கம் செட்டியார் மற்றும் குடும்பத்தினர்.


பின்குறிப்பு:- எமது நாமக்கல் சகோதரி திருமதி.சரஸ்வதி பட்டாபிராமன் & மாமா திரு.பட்டாபிராமன் அவர்களின் செல்ல(வ)ப்புதல்வி சௌ.சரண்யாவின் திருமண வாழ்த்து மடல்.



Monday, February 7, 2011

திருமண வாழ்த்து





மணமகள்: சௌ.B.தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா

மணமகன்: சிர.K.பாலசுபாஷ் குப்தா

மணநாள் : 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை

இடம்: கோயமுத்தூர்.


அழகான கனவுகளுடன்

ஆனந்த நினைவுகளுடன்

அன்பாகக் கைப்பிடித்து

அத்தானென அழைத்திடவே

ஆவலுடன் காத்திருந்தாய்.


அந்த நினைவு இனிதாக

ஆர்பரிக்கும் நட்பு சூழ,

ஆசி வழங்கும் உறவுக்கிடையே

அவருடன் இணைந்தாய் இன்றே நீ.

அளவாக அழகூட்டி,

அள்ளித்தான் முடித்திருப்பாய்,

அந்தி மயங்கும் வேளையிலே

அவர் வரவை எதிர்நோக்கி.


அவசரக் கோலமின்றி

அறிவான வாரிசுகளை

ஆர்வமாய் ஈன்றெடுத்து

ஆற்றலில் சிறந்திருக்க

அவணியை கைக்கொள்ள

அர்பணிப்பாய் உலகிற்கே.


அனுபவிக்கும் காலமெல்லாம்

அசைப்போடும் நேரமாக

அன்னையவள் அருள் புரிய

அன்னை உம் குலம் செழிக்க

அகண்ட மனமுடனே

ஆசிகள் பல யாம் செய்தோம்

அர்ச்சனா உம் இருவருக்கும் தானே.



மாப்பிள்ளை பெயரெடுக்க

மகிழ்வுடனே மாலையிட்டு

மங்கலயோசை விண்ணதிர,

மனமுவந்து இணையாக

மங்கையிவளை சிறைப் பிடித்தாய்

மயக்கிய மன்னனாய் நீ.


மாசற்ற அன்புடனே

மனையாளை சேர்த்தணைத்து

மங்கையிவளே பாக்கியமென

மற்றோர்க்கு எடுத்துக் காட்டாய்

மாசற்றத் தங்கம் போல்

மகவுகளை வளர்த்தெடுத்து,

மனைவி மக்கள் நலமொன்றே

மங்காத புகழென

மனைமங்கள ஆட்சி செய்து

மாமன்றமதில் செழிப்பாக

மகிழ்வுடனே வாழ்ந்திடவே

மனந்திறந்து வாழ்த்தினோம்


பல்லாண்டு! பல்லாண்டு!!

பலகோடி நூறாண்டு

நலமுடனும் வளமுடனும்

வாழ்கவென.


சௌ.B.அர்ச்சனாவின் சித்தப்பா:-

தவப்புதல்வன் (எ) A.M.பத்ரிநாராயணன்.


Mail Id: dhava.ambi@gmail.com; ambadri_57@yahoo.com

Thursday, June 3, 2010

ஜோதிமணிக்கு திருமண வாழ்த்து.


நண்பி ஜோதிமணிக்கு இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. அவருக்கான திருமண வாழ்த்து.

மங்கள நான் பூட்ட,
மணவாழ்க்கை புவி சிறக்க,
மாசில்லா மனங்களெல்லாம்,
மலர் தூவி வாழ்த்தட்டும்.

இல்வாழ்க்கைத் துணைவியாய்
மாறுகின்ற உன் வாழ்க்கை,
மறக்கவியலா மகிழ்வுக
ளாய்
வாழ்விலே நிலைக்கட்டும்.

அன்பினால் நவின்ற வார்த்தை
ஆனந்தத்தை நல்கட்டும்.
தேவர்களின் ஆசியால்
ஜோதியாய் ஒளிரட்டும்.
மணியாய் ஒலிக்கட்டும்.

இணையும் மனங்கள் இரண்டுமே
ஒரு மனமாய் இயங்கட்டும்.
இன்று போல் என்றுமே
இனிய வாழ்வாய் இருக்கட்டும்.

பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூறாண்டு
பேறுகள் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்று,
அன்புடன் வாழ்த்தும்.

Uncle,

A.M.பத்ரி நாராயணன்.


பின் குறிப்பு:
மேலே உள்ள புகைப்படம் அவர்களுடையது அல்ல.

Friday, April 9, 2010

வினிக்கு திருமண வாழ்த்து

அதேபோல சென்ற 2010 பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி மற்றொரு பெண் நண்பி வினி. இவர் கேரளத்துக்காரர். தமிழ் படிக்க தெரியாது. ஆனால் தமிழில் பேசுவதும், தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் படித்து புரிந்துக் கொள்வார். அவருக்கும் திருமண வாழ்த்தை 123greetings
மூலமாகவும், Orkut மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தாலும், கீழ் காணும் கவிதை மூலம் மீண்டும் இன்றொரு கவிதையை அனுப்பிவைத்தேன்.


கன்னியாய் காத்திருந்தாய்,
கற்பனையில் மூழ்கியிருந்தாய்.
கணவனாய் ஒருவனையே
காலத்திலேயே கைப்பிடிக்க.

ஓவியமாய் தீட்டியிருந்தாய்,
ஒருவனையே உன் மனத்தில்.
ஒப்பனையில்லா காதலுடனே
ஓடி வந்தான் நிசமாக.

வண்ணமலர் பூ பூக்க,
வனமெல்லாம் செழித்திருக்க,
வடியாத நதி போல,
வதனத்தில் நிறைந்திருக்க,
வளமான வாழ்வை நீங்கள்,
வற்றாது பெற்றிடவே,
வானத்துள் உறைபவனை
வணங்கியே வாழ்த்துகிறேன்.
வாழ்க! வாழ்க!! வாழ்க நன்றே!!!