Translate

Monday, February 7, 2011

திருமண வாழ்த்து





மணமகள்: சௌ.B.தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா

மணமகன்: சிர.K.பாலசுபாஷ் குப்தா

மணநாள் : 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை

இடம்: கோயமுத்தூர்.


அழகான கனவுகளுடன்

ஆனந்த நினைவுகளுடன்

அன்பாகக் கைப்பிடித்து

அத்தானென அழைத்திடவே

ஆவலுடன் காத்திருந்தாய்.


அந்த நினைவு இனிதாக

ஆர்பரிக்கும் நட்பு சூழ,

ஆசி வழங்கும் உறவுக்கிடையே

அவருடன் இணைந்தாய் இன்றே நீ.

அளவாக அழகூட்டி,

அள்ளித்தான் முடித்திருப்பாய்,

அந்தி மயங்கும் வேளையிலே

அவர் வரவை எதிர்நோக்கி.


அவசரக் கோலமின்றி

அறிவான வாரிசுகளை

ஆர்வமாய் ஈன்றெடுத்து

ஆற்றலில் சிறந்திருக்க

அவணியை கைக்கொள்ள

அர்பணிப்பாய் உலகிற்கே.


அனுபவிக்கும் காலமெல்லாம்

அசைப்போடும் நேரமாக

அன்னையவள் அருள் புரிய

அன்னை உம் குலம் செழிக்க

அகண்ட மனமுடனே

ஆசிகள் பல யாம் செய்தோம்

அர்ச்சனா உம் இருவருக்கும் தானே.



மாப்பிள்ளை பெயரெடுக்க

மகிழ்வுடனே மாலையிட்டு

மங்கலயோசை விண்ணதிர,

மனமுவந்து இணையாக

மங்கையிவளை சிறைப் பிடித்தாய்

மயக்கிய மன்னனாய் நீ.


மாசற்ற அன்புடனே

மனையாளை சேர்த்தணைத்து

மங்கையிவளே பாக்கியமென

மற்றோர்க்கு எடுத்துக் காட்டாய்

மாசற்றத் தங்கம் போல்

மகவுகளை வளர்த்தெடுத்து,

மனைவி மக்கள் நலமொன்றே

மங்காத புகழென

மனைமங்கள ஆட்சி செய்து

மாமன்றமதில் செழிப்பாக

மகிழ்வுடனே வாழ்ந்திடவே

மனந்திறந்து வாழ்த்தினோம்


பல்லாண்டு! பல்லாண்டு!!

பலகோடி நூறாண்டு

நலமுடனும் வளமுடனும்

வாழ்கவென.


சௌ.B.அர்ச்சனாவின் சித்தப்பா:-

தவப்புதல்வன் (எ) A.M.பத்ரிநாராயணன்.


Mail Id: dhava.ambi@gmail.com; ambadri_57@yahoo.com

2 comments:

Anonymous said...

பல்லாண்டு! பல்லாண்டு!!

பலகோடி நூறாண்டு

நலமுடனும் வளமுடனும்

வாழ்க.

Dhavappudhalvan said...

தங்கள் வாழ்த்து அவர்களுக்கு கிடைத்த இறைவனின் அருள்வாக்கு போல.