Translate

Friday, July 31, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன் சுதன் (1 )





சின்னவன் உனைக் கண்டேன்
சிந்திக்கும் நிலையிழந்தேன்.
சிரிக்கும் உன் அழகில்
சிக்கி நான் மயங்கி விட்டேன்

இளங்குறும்பாய் நீ நீயிருக்க
நலன் நிலையாய் நிலைத்திருக்க
வளர் கொள்ளும் பருவத்தில்
மகிழ்வுகளை வாரியிறைக்க,

அண்டத்து ஆண்டவரோ
உள்ளத்தில் குடிக்கொண்டு
உற்சாகமாய் நீ வளர
அருளதை வழங்கட்டும்.


முதலாம் பிறந்தநாளில் நல்லாசீர் பேராண்டி.




இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேரன் சுதன்




புரியாத மொழி கேட்டு
புரிந்ததாய் முகம் காட்டி
புன்னகை பூக்கின்றேன்
புது மலராய்
பூத்த பேரனிடம் நான்.

இன்று முதலாம் ஆண்டு பிறந்தநாள்
கொண்டாடும்
எங்கள் பேராண்டி சுதன் வாழ்க்கை.
ஒளிமயமாய் திகழட்டும்
வாழ்த்துங்கள் நண்பர்களே

Tuesday, July 28, 2015

கண்ணீர் அஞ்சலி - மாமனிதர் அப்துல் கலாம்


விதைத்த விதைகள் முளைக்கும் முன்னே
காலச்சக்கரம் விரைந்துமை அழைக்க,
விண்ணகம் சென்றீர்,  திரும்பா நிலையுடை
விண்ணூர்தி போல.

எங்களின் விழியோ ஊற்றென பொங்க
சிதறும் விழிநீர் மார்பை நனைக்க,
தூவா செய்தோம் மீண்டும் நீர் பிறந்து
பாரதத்தின் கோட்டையை கட்டி முடிக்க.

நீர் நட்ட விதைகள் துளிர்த்திட வேண்டும்
செழிப்பாய் அவையாவும் வளர்ந்திட வேண்டும்
நாளைய பாரதம் உழைப்பால் உயர,  
உம் ஆசைகள் யாவும் ஆசிகளாக வேண்டும்

உலகம் போற்றும் வல்லரசாக
இந்திய நாட்டை மாற்றிட எண்ணி 
நாளைய தூணில் நம்பிக்கைக் கொண்டு
நயம்பட உரைத்தீர் நற்பண்பு வளர.

வளரும் தலைமுறை உம் வழிதனில் நடந்து
இளைய தலைமுறை மனத்தினில் பதித்து
அக்னி பறவையாய் சிறகுகளை விரித்தால்
வசப்படும் விண்ணும் கைக்குள் அடங்கி.




மனத்தின் வலிதனை அறிந்தவர் உணர்வார்.
மரணத்தின் இழப்பினை யாதென்று உரைப்பார்.
மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு
மண்டியிட்டு அஞ்சலி செய்வோம்.


Monday, July 27, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Siva Shankar S


Siva Shankar S

வைக்கும் அடிகள்
முன்னோக்கி செல்ல
காலமும் அத்துடன்
விரைந்தே கழிய,

இன்றைய நிகழ்வுகள்
நாளைய கனவுகளாய்
நினைவுகளில் தன்னை
தடம் பதித்து செல்ல,

வளமும் வாழ்வும்
உயரமாய் செல்ல,
நலனும் மகிழ்வும்
அத்துடன் ஆட,

இறைவன் அளிக்கும்
வரங்களின் நிழலில்
என்றும் இளமையுடன்
பூரிப்பாய் இருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகனே


புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு அல்லுடு. 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேத்தி தியா செல்லம்





தியா செல்லம்,
செயல்கள் உனது அத்தனையும்
சிந்தனைக்கு விருந்தளிக்க,
செல்லமாய் என்றும்
செழிப்புடன் நீ வளர,

ஆசிகள் பல நூறு
அன்புடன் யாம் வழங்க,
இனிதாக இந்நாள்
மகிழ்வாக கடக்கட்டும்.

நல்லாசிகளுடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேத்தி தியா குட்டி.
புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு மனவராலு தியா.

Saturday, July 25, 2015

வாழ்த்துக்களை பகிர்வோம் – இன்றொரு தகவல்




ஒரு நாள் செல்லிடை பேசியில் எமக்கொரு அழைப்பு. சேலம் மாவட்ட எடப்பாடி என்ற ஊரிலிருந்து பேசுவதாகவும், பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள, 
வெளியே சென்றுவர இயலாநிலையுடன் சக்கர நாற்காலி 
துணையாக கொண்டு இயங்குகின்ற, கால்கள் செயலாற்ற ஒரு மாற்றுத்திறனாளி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட குமார்,

ஒரு பழைய கணினி ஒன்றை நண்பரொருவர் அன்பளிப்பாக கொடுத்திருப்பதாகவும், இணைய இணைப்புக்காக 
‘’டேட்டா கார்டு’’ ஒன்று கிடைத்தால் மிக்க உதவியாக இருக்குமென வேண்டுகோள் விடுத்தார். 
எமது மூலம் இச்செய்தியை அறிந்த முகநூல் நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியர் அவர்கள் தன்னிடமிருந்த ‘’டேட்டா கார்டு’’ஐ தனது தாயார் மூலம் மகிழ்வுடன் வழங்கினார்.

#அவருக்கு நமது மனமுவந்த வாழ்த்துக்களை பகிர்வோம் நண்பர்களே.


*புகைப்படத்தில்: நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியரின் தாயார் அவர்கள் வழங்க, குமாரின் அப்பா பெற்றுக் கொள்கிறார்.

Thursday, July 23, 2015

ஓ ஓ... ஐயோ பாவம்.... நானா அதுவா?

சுரங்கம் தோண்டிய எறும்புகள்

என்ன, எறும்பு என்றால் தனது வாழ்விடத்திற்காக சுரங்கம் தோண்டத்தான் செய்யும்.
இதிலென்ன பெரிய தகவல்/ செய்தின்னு நீங்க நினைக்கலாம். வாசித்து பாருங்களேன்.

எங்கள் வீட்டின் தாழ்வாரத்து தரையில் (போர்டிகோவில்)  
ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு ஊர்ந்து
சென்றுக் கொண்டும் வந்துக்
கொண்டுமிருக்கும். வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ வந்து செல்பவர்கள்,
மிதித்தும், தாண்டியும் சென்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும்
இல்லை. ஆனால், எனக்கு அப்படியா, தவழ்ந்தோ நகர்ந்தோ செல்ல வேண்டுமே!

ஒவ்வொரு முறையும் அப்படி சென்று வரும்போது,
ஜைன மதத்துறவிகளைப் போல, நான் அவ்வரிசையை கடக்கும்போது
இந்த பக்கம், அந்த பக்கமென்று கால் மேதியடியால் ஒதுக்கிவிட்டு சென்று வந்தேன்.
ஆனாலும் தங்கள் இனத்தை அழிக்கின்ற, நசுக்குகின்ற ராட்சதனாக
நினைத்துக் கொண்டு, எமது கால்களிலும், துடைகளிலும் மற்றும்
வெளி சொல்ல முடியாத இடங்களிலும்,
தனது கூறிய பற்களால் / வாயால் கடித்து ரணகளப்படுத்திக் கொண்டிருந்தது.

இத்தொந்தரவை பொறுக்கமுடியாமல்,
இந்த எரும்புக் கூட்டத்தை ஒழித்து விட வேண்டுமென்று,
நான் கடக்கும் இடத்தை விட்டு விட்டு, மருந்து தெளித்தேன்.
ஆஹா ஒழிந்தது இனி வராது என நினைத்தால், சில மணி நேரங்கள் அல்லது மறுநாள்
மருந்து தெளித்த இடத்தை விட்டு சிறிது தள்ளி
மீண்டும் புதிய வரிசை ஆரம்பமாகி இருக்கும்.
விடுவேனா என்று நான் மருந்து தெளிக்க, அது சிறிது தள்ளி புது வரிசை கட்ட,
இப்படியே நாட்கள் கடந்து, அது படிகளின் இணைப்புகள் இடத்தில் ஓரமாய் சென்றுவர,
நான் படிகளில் இறங்கி ஏறும்போது, என் துணிகள் பட்டு அதன் வரிசை கலைந்தது, கோபம் வந்தது,
பிடித்து கடித்தது. மீண்டும் எங்களுக்குள் யுத்தம் துவங்கியது.

நான் மருந்து தெளிக்க, அது படிகள் மாற, இப்படியே கீழும் மேலுமாக மாறி,
போராட்டம் எங்களுக்குள். ஒவ்வொரு முறையும் கடக்கும்போதும் கவனிப்பேன். அப்படியிருக்கையில்,
இரண்டு நாள் வெளியூர் பயணம் முடிந்து, வீட்டுக்குள் நுழையும்போது
பார்த்தேன் எறும்பு வரிசை காணோம். ஒரு வேளை தூங்கி ஓய்வேடுக்கிறதோ,
நாளை காலை பார்ப்போமென முடிவெடுத்தபடி உறங்கிப்போனேன். மறுநாள்
காலை பார்த்தேன், சுவற்றில் எறும்பு வரிசை இருந்தது. பார்த்தால் அது வாசற்படி
மரச்சட்டத்தை ஒட்டியபடி சுமார் ஒரு அடி உயரத்தில் நுழைந்துக்
கொண்டிருந்தது, வாசற்படியின் அடுத்த பக்கமும் ஒரு வரிசை சென்று
வந்து கொண்டிருந்தது.

அட இது எங்கிருந்து என பார்த்தால், வாசற்படியின் எதிர்புற மரச்சட்டத்தில் வெளிய வந்து உள்  
சென்று கொண்டிருந்தது. அதுவும் எதிர் சட்டத்தில் எந்த உயரத்தில் துளை இருந்ததோ,
 அதே உயரத்தில் துளையைக் கண்டதும் விழிகள் விரிந்தது.
அப்பாடி ஒரு வழியாய் சுரங்கம் அமைத்து விட்டது. சண்டை ஓய்ந்தது.
இனிமேல் வாசலைத் தாண்டும்போது கடிபட்டு அவதிப்பட தேவையில்லை
என நான் நினைக்க, இந்த ராட்சனிடம் மாட்டி நம் கூட்டம் சாக வேண்டியிருக்காது என
அதுவும் நினைத்திருக்கலாம்.

ஆஹா... இந்த நிலை ஒரு சில நாட்கள் மட்டுமே. படியில் புதிதாய் ஒரு வரிசை கண்டதும்,
இது என்ன சோதனை? என்ன ஆனது? ஏனிந்த நிலையென பார்த்தால்,
நதியில் கிளை பிரிவதுபோல பிரிந்து, இந்த பக்கம் வந்தபிறகு,
அந்த வரிசையில் இணைந்தது கூடுதுறை போல.
சுரங்க பாதையில்  டிராபிக் ஜாம் போலிருக்கிறது. ஓ ஓ...  ஐயோ பாவம்.... நானா அதுவா?




Tuesday, July 21, 2015

தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Magic Barath


Magic Barath

விரிந்த வானமும்
வியந்து வளைந்திருக்கிறது,
புவியை நோக்கி
உன் வித்தைகளால்.

உன் திறமையும் புகழும்
வானோக்கி உயரட்டும்.
கவிழ்ந்த வானம்
நிமிராமல் இருக்கட்டும்.

ஆண்டவனின் கருணை
அணைத்துனைக் காக்கட்டும்.
நலமுடன் காலம்
மகிழ்வாய் கழியட்டும்.

தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகனே.

புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு அல்லுடு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Thiyaga Lakshmi Badri

Thiyaga Lakshmi Badri


எத்தனையோ நினைவுகள் 
சுழன்றோடும் வேகமான நேரத்தில் 
மென்மையாய் தழுவுமோர் நினைவு
சுகமாய் மனத்தை அலசியபடி.

காலங்கள் கடந்தாலும்
நினைவுகளில் நீங்காது,
ஆனந்தராகம் பாடும்
"அம்பா"வெனும் பாசக்குரலொலி.

நலனும் மகிழ்வும் 
சேர்ந்தணைத்து கொண்டாட,
வளமுடன் வாழ்வு 
இணைந்தென்றும் உறவாட,
ஆசிகளைப் பகிர்ந்தோம்
இனிதான இந்நாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகளே.


புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு கோடலு.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - இலங்காதிலகம் - வேதநாயகாம்பாள். (Vetha Langathilakam)



Vetha Langathilakam

இலங்காதிலகம் - வேதநாயகாம்பாள்

ஆறேட்டைத் தொட்டதோ?
கடந்ததோ இல்லறம்,
இரண்டற கலந்து,
இமயமாய் உயர்ந்ததோ?

வாழ்விலே வசந்தம்
இளமையாய், இனிமையாய் aதிகழ
அண்டியிருக்கும் அவனருள்
ஆசிர்வதிக்கட்டும் என்றுமே உமை.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வேத இலங்காதிலகம் அம்மையே.



Saturday, July 18, 2015

மொட்டு


பாவாடை இறுகக்கட்டி
மேற்சட்டை கொக்கிப் போட்டு
வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்தாள்,
மல்லிப்பூ தோரணமிட
பின்னலிட்ட இரட்டை சடை துள்ளியாட
தேரில் செல்லும் தேவதையாய்
அங்குமிங்கும் வலம் வந்தாள்
சந்தோச குவியலை தெளித்தப்படி
சின்னஞ்சிறு குழந்தையாக (  குழந்தையவள் )

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - கவியன்பன் கலாம் ( Kalam Shaick Abdul Kader )






கவியன்பன் கலாம்
Kalam Shaick Abdul Kader

தமிழிலே உடலிருக்க,
எழுத்தாலே உயிரியங்க,
ஓவியமாய் கவிதைகள் துலங்க,
ஒப்பற்ற கவிஞராய் நீர் சிறக்க,
காலங்கள் நலமுடன் கழிய,
ஆண்டவனருள் உடனிருக்க,
வாழிய பல்லாண்டு மகிழ்வுடெனென  
வாழ்த்தினோம் அன்புடனுமை கவிஞரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Thursday, July 16, 2015

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு 
வெற்றி பெற வாழ்த்துக்கள் 

Www.rrbonlinereg.in

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு
வெற்றியடைய வாழ்த்துக்கள்.

V.V.IMPORTANT JOB'S:plz share at lest without ignoring🙏👍

Pls keep fowarding this news until it reaches the needy:

FORD MOTORS hiring candidates for various post to its new plant: Free cab for pick up and drop, no agreement, permanent job.

10th, 12th - job: commercial checking, 2months training, first two month 10,000/-, from third month 12,000/-.

Any diploma - job: operator, one month training, first month 13,000/-, from second month 14,000/-.

B.Sc (C.S), BCA - job: information forwarding, computer operating, one month training, first month 15,000/-, from second month 16,000/-.

B.Com, BBA - job: Accounts and financial assistance, one month training, first month 15,500/-, from second month 17,000/-.

MBA - job: financial management, house keeping management, one month training, first month 19,000/-, from second month 22,000/-.

MCA - job: document maintenance, program editing, one month training, first month 18,000/-, from second month 21,000/-.

Contact:
90 42 233969,
 81 48 597135,
 99 44 104830.
 Contact soon and avail your perfect job.
 Forward to your all friends👬 and give them your best help.

TCS Finance team is hiring B.Com. graduates. If u know anyone, ask them to send CV to amol2.anekar@tcs.com.
 Exp: 0 to 3 yrs.

Please forward asap
 Vacancy in Mahindra Tech Accounts Receivables. & Payable Graduates & MBA fresher can apply with good knowledge of accounts. Fixed Shift 12.30 to 10.00 pm. pick drop facility. 2 days off. salary 20-25 k. Min exp 6 months. please forwrd it to ur frnds who r in search of job. contact Rohit Patil @ 9833010043
 Essar having below openings

1. Job Title - Production Supervisor
Experience - 5 to 7 years
Qualification - DME / B.E Mechanical
 CTC- 4 to 7 lac

2. Job Title- Team Leader Machine Shop
 Qualification - DME / B.E Mechanical
 Experience - 3 to 4 years
CTC - 2 to 3 lac

3. Job Title- Machine Shop In charge
 Qualification - DME / B.E Mechanical
 Experience - 5 above
 CTC - 4 to 5 lac

4. Job Title - Jr Officer Stores
Qualification - B. Com
Experience - 1 & above
CTC - 1.2 & above

5. Job Title - Engineer Design & Devpt
Qualification - DME / B.E Mechanical
 Experience - 1 to 2 years
CTC- 2.5 lac

6. Job Title - Engineer Projects
Qualification - DME / B.E Mechanical
 Experience - 3 & Above
CTC- 3 to 4 lac

 7. Job Title - Trainee Engineer Production
Qualification - DME / B.E Mechanical
 Number of opening - 5
Experience - Fresher
CTC- as per company policy

8. Job Title - Trainee Metallurgy
Qualification - Diploma Metallurgy / Bsc - chemistry
Experience - Fresher
CTC- as per company policy

9.Job Title - Officer Finance
 Qualification - MBA/ B.com
 Experience - 2 years & above
 CTC- 2.5 lac

10. Job Title - Trainee Vendor Development
Qualification - DME / B.E Mechanical
 Experience - Fresher
CTC- as per company policy

11. Job Title - CNC Operator
Qualification - DME / ITI
Number of Opening - 05
Experience - 1 to 2 years
CTC- 1.5 to 2 lac

Interedted candidates can send resumes on
jaimin.vyas@essar.com

If it is not useful to you...
 Share this in your circle, this create career to someone





  1) YES Bank of India Recruitment notification 2015
 Salary - Rs.10,000 to Rs.25,000 per month
 Qualification : Diploma, ITI, Graduates, Engineering
 More Details & Apply click here -> http://bit.ly/1u9tUne

2) Lakshmi Vilas Bank Recruitment of Probationary Officers
 Salary - 33,333 per month
 Qualification - Graduates, Engineering
 Apply click here -> http://bit.ly/1FXDEUT

3) Syndicate bank Recruitment 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad
 Apply click here -> http://bit.ly/104wJYQ

4)Goa Shipyard Limited Recruitment 2015
 Qualification : Diploma, Graduates, Engineering
 Salary : 54,500
 Apply click here -> http://bit.ly/1tEs8IH

5)Film Television Institute of India Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, grad, Eng
 Total vacancy - 82 Posts
  Salary - 20,200 per month
 Apply click here -> http://bit.ly/1E4bTrS

6)Ministry of Finance Recruitment notification
 Total Vacancy - 97 posts
 Salary - 15,600 to 39,100
 Apply click here -> http://bit.ly/1zLQlBu

7)Indian Oil Corporation (IOCL) Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, grad, Eng
 Salary - 24,900 to 73,000 per month
 Apply click here -> http://bit.ly/10zVJbr

8) IDBI BANK Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Total vacancy - 10 posts
 Apply click here -> http://bit.ly/1thD7rA

9) HSBC India Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Salary - 15,000 to 25,000 per month
 More Details & Apply => http://bit.ly/1nPHGbT

 10) Mazagon Dock Limited Recruitment Notification 2015
 Qualification : Graduates, Engineering
 Salary 51,640 per month
 Apply click here -> http://bit.ly/1wFwccJ

11) Engineers India Limited Recruitment 2015
 Qualification : Graduates, Engineering
 Salary - 50,500 Per Month
 Total Vacancy - 30 Posts
 Apply click here -> http://bit.ly/1zfcAhS

12)Indian Statistical Institute Recruitment
 Salary - 20,000 to 25,000
 Apply click here -> http://bit.ly/1xDH0pS

13)South East Central Railway Recruitment
 Salary - 20,200 per month
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad, Eng
 Apply click her e-> http://bit.ly/1rzd9dR

14)Subordinate Service Selection Board Recruitment
 Total Vacancy - 226
 Qualification - Graduates
 Salary - 34,800 per month
 Apply click here -> http://bit.ly/1xDw8Zc

15)United India Insurance Recruitment 2015
 Total Vacancy - 323
 Salary - 37,000 per month
 Apply click here -> http://bit.ly/1tgEqHm

16) 65,000 Vacancy for Engineers across India
 Salary - 74,200 per month
 Qualification : Diploma, Engineering
 Apply click here -> http://bit.ly/1tgVn2V

17) Air India Recruitment Notification 2015
 << 161 CABIN Crew Vacancy >>
 Salary - 31,500 per month
 Qualification : 10, 12, Diploma, ITI
 Apply click here -> http://bit.ly/1tgqWvc

18) LOK SHABA of INDIA Recruitment 2015
 Qualification : 10, 12, Diploma, Graduates
 Salary - Rs. 34,800
 More Details & Apply click here -> http://bit.ly/1xCYN0r

19) PSPCL Recruitment 2015
 Salary : Rs.16,650 to 39,100 per month
 Qualification - Eng, Grad
 Total vacancy - 204 Posts
 Apply click here -> http://bit.ly/1nOGMwa

20) Steel Authority of India recruitment Rally 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad, Eng
 Total vacancy - 609 Posts
 Apply click here -> http://bit.ly/1sCeYqm

21) DRDO Recruitment notification 2015
 Total Vacancy - 964 posts
 Qualification - Diploma, ITI, Grad, Eng
 Apply click here -> http://bit.ly/1yH5EY2

22) Hindustan Petroleum Corporation Limited Recruitment
 2015 Qualification - Graduates, Engineering
 Total Vacancy - 107 Posts
 Apply click here -> http://bit.ly/1sy1VGw

23) SSC Southern Region Recruitment 2015
 Qualification : 10,12, Diploma, ITI, Grad, Eng
 Post - Assistant Programmer
 salary - 34,800 per month
 Apply click here -> http://bit.ly/1wD9gbW

24) Ministry of Finance Recruitment 2015
 Total Vacancy - 97 posts
 Salary - Rs. 15,600-39,100
 Apply click here -> http://bit.ly/1yG6rID

25) Konkan Railway recruitment notification 2015
 Salary - 34,800
 More details & Apply click here-> http://bit.ly/1rwDSaE

26) SBI General Insurance Recruitment 2015
 Post - Executive Managers
 Qualification - Diploma, ITI, Grad, Eng
 More Details & Apply click here -> http://bit.ly/1DUX7Dz

27) Goa Shipyard Recruitment 2015
 Salary - 16,400 to 54,500 per month
 Qualification : Diploma, Grad, Engineering, MBA, PG
 Apply click here -> http://bit.ly/1t7Xq9l

28) Syndicate Bank Recruitment notification 2015
 Qualification : 10, 12, Diploma, ITI, Grad
 Apply click here -> http://bit.ly/1v2qzRB

29) Air India Recruitment 2015
 Total Posts:- 160+2000
 Qualification:- 10th, 12th, Diploma, Graduation
 Degree

 Guys plz share it ....if u dont want employment but in india there are many frds searching for jobs

இதுவொரு மயக்கம்

செடி தந்த, பூத்த பூவிலே
உன் முகம் கண்டேன்.
அதுவிருக்கும் நிலையிலே,
நீ நிற்கும் நிலைக்கண்டேன்.
தலை கவிழ்ந்த பூவிலே - உன் 
வெட்கச்சாயல் நான் கண்டேன்.
மலர் தந்த நிறத்தில் - உன் 
வதனத்தின் நிறம் கண்டேன்.
காற்றாட கடந்த போது - நீ
அழைப்பதாய் நெருங்கி சென்றேன் 
என்னிலே நீயிருக்க,
பூவிலே உனைக் கண்டு,
மயங்கிய எனைக் கண்டு, - நீ 
நகைப்பதாய் நினைத்துக் கொண்டேன். 😍😊😊



Monday, July 13, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கவியரசி தேனம்மை லக்ஷ்மணன்

நினைவுகளுக்கு சுவைக் கொடுக்கும்
மகிழ்விலே நீந்த வைக்கும் 
சிறப்பான நாளின்று.

தரித்த நாள் நிகழ்வில்
தாலட்டும் வாழ்ததுகளால்
மகிழ்விலே சொக்கி நிற்க, உமக்கு
உற்சாகமாய் அமையட்டும் 
அன்பான எம் வாழ்த்தும் .

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழியே.

Sunday, July 12, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Sadeek Ali Abdullah

இளமையின் ரகசியங்கள் 
உம்மிலே நிறைந்திருக்க,
இறைவனின் அருளொளி
உமையென்றும் சூழ்ந்திருக்க,
இல்வாழ்க்கை சுகமாய் 
என்றுமே நிலைத்திருக்க,
வாழ்த்தினோம் யாம்
நண்பரே, நீர் மகிழ்ந்திருக்க.


தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

Friday, July 10, 2015

இன்றைய கேள்வி


வெங்கடேசன்: பார்வை  குறைப்பாடு உள்ளவர்கள்  குருப் 1 தேர்வு எழுத அனுமதி உண்டா?

தவப்புதல்வன் பதில்: 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ளவர்கள், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, கூடுதலாக, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிட வீதம் அவகாசம் அளிக்கப்படும். முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு ஆகியவற்றுக்கு, இச்சலுகை கிடைக்கும்

தகவல்: http://www.pallikudam.com/2015/06/blog-post_159.html

நன்றி: பி.ராமலிங்கம் புளியங்குடி  P.Rajalingam Puliangudi 

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண சலுகை விலை அட்டைகள்


தற்போது தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகியன ஆகும்.
சேலம் கோட்டத்திற்கு சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகை அட்டைகளை சேலம் ஜங்ஷன் (சந்திப்பு நிலையம்) கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, நேரிலும் தபால் மூலமும் அனுப்பியும் ரயில் பயண சலுகை விலை அட்டைகளைப் பெறலாம். அத்துடன் விண்ணப்பதாரர் தங்கள் மொபைல் போன் எண்ணையும் குறித்திருந்தால், எஸ்.எம்.எஸ் வசதி மூலமாக தகவலும் தெரிவிக்கப்படும்.
‪#‎மாற்றுத்திறனாளிகளுக்கு‬ சரியான தகவல்கள் எட்டாமையாலும், ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களைப் பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்கள், சமூகநலத்துறை அலுவலகங்கள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்கள் போன்ற இடங்களில் விண்ணப்பங்களை வழங்கும் வசதியை ஏற்படுத்தி தருவதுடன், அது குறித்த தகவலை ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை வழங்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
‪#‎தர்மபுரி‬, ஓசூர் எந்த ரயில்வே கோட்டத்தில் வருகிறது என்பது விபரமில்லை.
திருவனந்தபுரம் கோட்டத்தில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில் - திருநெல்வேலி மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த ஊர்களும் வரும். தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே நிலையங்களில் விசாரித்து தெரிந்துக் கொள்ளவும்.
அல்லது கீழ்காணும் முகவரியில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் திரு.எட்வர்ட் ஜெனி அவர்களையும் தொடர்புக் கொண்டு பயனடைலாம் என தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari

Wednesday, July 8, 2015

மனமார வாழ்த்துவோம் நண்பர்களே!




 இன்று முடிவுகள் வெளியிடப்பட்ட இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள,டெல்லியை சேர்ந்த பெண்மணியான *ஈரா சிங்கால், ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  இந்திய வருவாய் துறையில் அதிகாரியாய்  பணியாற்றி வருகிறார். அவரைக் குறித்து சிறு குறிப்பு:-


சட்டத்தை உடைத்து
சாதனை படைத்த
மாற்றுத்திறனாளி
.
ஐஏஎஸ் தேர்வில் தேசிய
அளவில் முதல் இடத்தைப்
பிடித்து மகத்தான
சாதனையைப்
புரிந்துள்ளார் ஐரா
சிங்கால். 31 வயதாகும்
மாற்றுத்திறனாளி
யான
ஐரா, ஐஏஎஸ் தேர்வில்
தேசிய அளவில்
முதலிடத்தைப் பெற்ற
மாற்றுத் திறனாளி என்ற
அசத்தலான சாதனைக்குச்
சொந்தக்காரராகி
உள்ளார். 

31 வயதாகும்
ஐரா சிங்கால் இந்திய
வருவாய் பணி (ஐஆர்எஸ்)
அதிகாரி ஆவார்.
ஆனால், இந்தப் பதவியைப்
பெற இவர் பல்வேறு
சட்டச் சிக்கல்களை ஆரம்ப
காலத்தில்
எதிர்கொண்டார். மாற்றுத்
திறனாளியாக
இருந்ததால் பல
சிக்கல்களுக்கு ஆளானார். 

.
நீ ஒரு மாற்றுத்
திறனாளி. உன்னால்
தனியாக நிற்கக்கூட
முடியாது.
துப்புரவுத்
தொழிலாளியாக
இருக்கக் கூட
லாயக்கில்லை என 

அண்டை வீட்டாரின் கேலி, உடன்
படித்தவர்களின்
கிண்டல்களால் சிக்கி சில சமயங்களில் 
துவண்டபோதும் மனம்
தளறவில்லை.


 அசராத மன
தைரியத்தால் இன்று
ஐஏஎஸ் தேர்வில்
முதலிடம் பெற்று
முத்திரை பதித்தவர்
ஐரா. டெல்லியைச் சேர்ந்த
ராஜேந்திர சிங்கால்,
அனிதா சிங்கால்
தம்பதியின் ஒரே மகள்
ஐரா சிங்கால். லாரென்டோ
கான்வென்ட் பள்ளியில் 10-
ஆம் வகுப்பு முடித்த
ஐரா, தௌலா கானில் உள்ள
ராணுவப் பள்ளியில் 12-
ஆம் வகுப்பை முடித்தார்.
இதையடுத்து, நேதாஜி
சுபாஷ் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில்
பி.இ (கணினிப் பொறியியல்) 

பட்டப்படிப்பு முடித்தார்.
பின்னர் டெல்லி
பல்கலைக்கழகத்தி ல்
எம்பிஏ (விற்பனை,
நிதி) முதுகலைப்
படிப்பிலும் தேர்ச்சி
கண்டார்.
அப்போது இவருக்கு
வேலைவாய்ப்புக்
கிடைத்தது.
இதையடுத்து, 2008
முதல் 2010 வரை
காட்பரி இந்தியா
நிறுவனத்தில்
வாடிக்கையாளர்
மேம்பாடு
அதிகாரியாக
பணியாற்றினார்.
முதுகுத்தண்டு
வளர்ச்சி குறைபாடால்
பிறவியிலேயே
பாதிக்கப்பட்ட
இவருக்கு அரசுப்
பணியில் சேர வேண்டிய
ஆர்வம் சிறு
வயதிலிருந்தே உள்ளது.
அதனால் பட்டப்படிப்பு
முடித்தது, மத்திய
அரசுப் பணிகள்
தேர்வாணையமான(யு
பிஎஸ்சி) தேர்வுக்கு
ஆயத்தமாகி வந்தார்.
2010-இல் நடந்த தேர்வில்
இவர் தேர்ச்சி பெற்று
ஐஆர்எஸ் பணியை
இவருக்கு வழங்க மத்திய
அரசு இசைவு
தெரிவித்தது. இதைத்
தொடர்ந்து, மருத்துவத்
தகுதிப்
பரிசோதனைக்கு இவர்
ட்படுத்தப்பட்டார்.
அப்போது இவருக்கு
பல்வேறு சோதனைகள்
வந்தன.
மாற்றுத்திறனாளியாக
ஐரா சிங்கால்
இருந்தது, ஐஆர்எஸ் பணி
அதிகாரி வெறும் 4.5
அடி மட்டுமே உயரம்
இருப்பதால் அவரால்
அப்பணியை செய்ய
முடியாது என்று கூறி
அவருக்குப் பணி வழங்க
மத்திய அரசு
மறுத்துவிட்டது.
இதனால் கடும்
கோபமடைந்த ஐரா,
மத்திய நிர்வாகத்
தீர்ப்பாயத்தில்
வழக்குத் தொடர்ந்தார்.
அதில் அவருக்கு
சாதகமாகத் தீர்ப்பு
வந்தது. இதையடுத்து,
2013-இல் ஐஆர்எஸ்
அதிகாரியாக
நியமிக்கப்பட்ட அவர்
மத்திய சுங்கத்
துறையில் உதவி
ஆணையராகத் தற்போது
டெல்லியில் பணியாற்றி
வருகிறார். அரசுப்
பணிக்கு வரும்
முன்னதாகவே தனது
உரிமையை நிலைநாட்டி
வழக்குத் தொடர்ந்தவர்
ஐரா. கால்பந்துப்
போட்டியில் அதிக
ஆர்வமுடையவர். சட்டம்
என்பது அனைவருக்கும்
ஒன்றே தாரக மந்திரம்
கொண்டவர். விடா முயற்சி
விஸ்வரூப வெற்றி என்ற
சொல்லை அடிக்கடி
சொல்லிக் கொள்வாராம்.
ஆங்கிலம், ஹிந்தி மொழி
மட்டுமன்றி ஸ்பெயின்
நாட்டின் ஸ்பானிஷ்
மொழியையும் சரளமாகப்
பேசும் திறனைப்
பெற்றுள்ளார் ஐரா
சிங்கால்


தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், 118 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வனத்துறை அதிகாரியான கோவை சாருஸ்ரீ, அகில இந்திய அளவில் 6ம் இடமும்,  தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

*முதலிடம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளி யான ஈரா சிங்கால் தமிழகத்தில் வெற்றிப் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துவோம்.

‪#‎பாராட்ட நினைத்தால் கருத்திடுங்கள்

Monday, July 6, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமண வாய்ப்பு


தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 51 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.என மாநில சங்க துணைத்தலைவர் பூபதி தெரிவித்திருப்பதாவது,

51 சீர்வரிசைப் பொருட்கள், 
2 கிராம் தங்கத்தாலி,
2 மாத மளிகைப் பொருட்கள்,
மண மக்களுக்கு புத்துடைகள்,
அரசு திருமண பதிவு சான்றும் வழங்கப்படும்.     

திருமண ஜோடியில் குறைந்தது ஒருவர்  மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்,
மாற்றுத்திறனாளி அல்லாதோர்,
கணவனால் கைவிடப்பட்டோர்,
விதவை ( ஆண், பெண்)
விவாகரத்து  பெற்றோர்,
ஜாதி, மத பேதமில்லை என நினைப்போர் பங்கேற்கலாம்.

இலவச சுயவரம் ( தேர்வு) நடைப்பெறும் இடங்களும் தேதியும்:
1) ஜூலை 19ல்  - விழுப்புரம்  
2)  ஜூலை 26ல்  - திருவாரூர் 
3) ஆகஸ்ட் 16ல்  - ஈரோடு 
4) ஆகஸ்ட் 23ல்  - சென்னையில் 

திருமணம் நடைப்பெறும் இடமும் தேதியும்::
2015 டிசம்பர் 2ம் தேதி - சென்னையில் 

*திருமணத்திற்கு சட்ட திட்டங்களின்படி அரசு வழங்கும்  தாலிக்கான 4 கிராம் தங்கமும், வைப்பு நிதியும் கிடைக்கும் என நினைக்கிறேன் மற்றும் வேறு விபரங்களுக்கு, 96004 50676 மொபைல் ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மாற்றுத்திறநாளிகளுக்கு தேசிய விருது - விண்ணப்பங்கள்


 மாற்றுத்திறநாளிகள் மறுவாழ்வுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 14 பிரிவுகளில், மத்திய சமுக நீதித்துறை சார்பில், டிசம்பர் 3ம்  தேதி, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விவரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறநாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறநாளிகளுக்கான மாநில ஆணையருக்கு, வரும் 10ம்  தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Sunday, July 5, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பேத்தி சாதனா 04/07/2015





சிட்டுக்குருவியே
சிறகடிக்கத் துவங்கிவிட்டாய்.
வானைத் தொட்டுவிட
வட்டமிடும் வல்லூறாய்
வளர்நிலை செயலால்
உயர்நிலை நீயடைய,
பவனி வரும் பிதாமகனின்
பளிச்சிடும் அருளொளி
பரவியுனைக் காக்க,
பாசமுடன் வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன்
நல்லாசிகள், எங்களருமை பேத்தி சாதனா. 


வாழ்த்துவோம் நண்பர்களே!



இன்று முடிவுகள் வெளியிடப்பட்ட இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள,டெல்லியை சேர்ந்த பெண்மணியான *ஈரா சிங்கால், ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  இந்திய வருவாய் துறையில் அதிகாரியாய்  பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், 118 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வனத்துறை அதிகாரியான கோவை சாருஸ்ரீ, அகில இந்திய அளவில் 6ம் இடமும்,  தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

*முதலிடம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளி யான ஈரா சிங்கால் தமிழகத்தில் வெற்றிப் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துவோம்.

Friday, July 3, 2015

அட போடா! - குறுங்கவிதை



அட போடா!
இதுதான் வாழ்க்கை
உனை மறந்து போகிறேன்
அவனில் மூழ்கி நான்

Wednesday, July 1, 2015

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ‎Karunakaran Venkatesan




Karunakaran Venkatesan

சிக்கென்ற உடலுடன்
சிலுசிலுக்கும் மனமுடன்
சிந்தனையில் உயர்வளிக்கும்
சிறப்பான வருடமாய் இதுவமைய
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Jananee Namu



Jananee Namu

அசையும் மணித்துளிகள்
அசைப்போடும் நினைவுகளை.
ஆனந்தம் மேருகடைந்து
ஆடவைக்கும் நாளின்று.

துளித்துளியெனினும் 
தூண்டும் மகிழ்வுகள்,
நலன்களாய் கூடி யது - வரும்
நாட்களதில் இனிக்கட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளுடன் 
அன்பான நல்லாசிகள் மகளே.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்



தமிழகத்தில், மாற்றுத் திறனாளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத் திறனாளிகளுக்கான  மாதிரி பள்ளியாக மாற்ற, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு இட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறை சூழல், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறை, குடிநீர், சாய்தள வசதி போன்றவற்றை மேம்படுத்த உத்திரவு இடப்பட்டுள்ளது.
வந்து செல்ல சிரமமில்லாத வகையில் மாதிரி பள்ளியை தேர்வு செய்யும் பணியுடன், நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- நாளிதழ் செய்தி,

#இதை வரவேற்கின்ற இச்சமயத்தில், ஒரு  மாற்றுத் திறனாளி என்ற முறையில் எமக்கு சில சந்தேகங்கள்:-


1) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழெனில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தானே, அருகில் உள்ள பள்ளிகளில் வந்து அனைத்து   மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து படிக்கயியலும்!
2) மாவட்டத்திற்கு ஒன்று என்றால், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து தங்கி படிக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதா?
*ஆமெனில்,
செய்தியில் தெளிவு படுத்தபடவில்லையே.
3) சிறப்பு வசதிகள் என்றால்,
a) நடக்கவியலா  மாற்றுத் திறனாளி மாணவர்கள் வகுப்பறையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாசிக்கவும்,
b) உயர குறைப்பாடு உள்ளவர்கள் அமரும் வகையில் உயர்த்தி தாழ்த்தும் வகையில் வசதியான தனி நாற்காலிகள் வழங்கப்படுமா?
c) பார்வை  குறைபாடு உள்ளவர்களுக்கு முன்னிருக்கைகளில் அமர வசதி, மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படுமா? 
d) பார்வையற்ற, செவி கேளா மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, அப்பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா? தனி சிறப்பு ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்படுமா?
4) கழிவறைகளின் அமைப்பு சாய்தளத்துடன்  இருந்தாலும், உயரமாக அமைக்கப்பட்டிருந்தால்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின்  அவசரத்துக்கு உதவாமல் அல்லல்பட வைக்கும் 
*தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைகள் அனைத்தும் சாய்தளத்துடன் அமைக்கப்பட்டிருப்பினும், தரைதளத்தில் வசதியாக சென்று பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உயரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கவனித்தில் கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் இலகுவாக பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதால், இந்திய வகை, மேல்நாட்டு வகையென இரு வகையும் கைப்பிடிகளுடன் கூடிய விசாலமான கழிவறைகள் சக்கர நாற்காலிகள் சிரமமில்லாத வகையில் உள்ளே சென்று திரும்பி வெளிவரும் வகையில் அமைக்கப்பட வேண்டும், சிறுநீர் கழிப்புக்கும் வசதியான அமைப்புகளை அமைக்க வேண்டும், உடனுக்குடன் சுத்தமாக, உலர்நிலையில் பராமரிக்க ஆண், பெண்  பணியாட்கள் நியமிக்க பட வேண்டும். 
*குறைவற்ற நீர்   வசதியும் செய்யப்பட வேண்டும் 


#மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை  வசதிகளுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், அவசரகதியில் இக்கல்வியாண்டிலேயே துவக்குவதை விட, சரியான திட்டமிடலுடன், முழுமையான வசதிகளுடன் உருவாக்கி அடுத்த கல்வியாண்டில் தாமதமின்றி செயல்படுத்தினால், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும்  சிறப்பையும் பெருமையையும் அளிக்கும்.