Translate

Monday, July 6, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமண வாய்ப்பு


தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 51 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.என மாநில சங்க துணைத்தலைவர் பூபதி தெரிவித்திருப்பதாவது,

51 சீர்வரிசைப் பொருட்கள், 
2 கிராம் தங்கத்தாலி,
2 மாத மளிகைப் பொருட்கள்,
மண மக்களுக்கு புத்துடைகள்,
அரசு திருமண பதிவு சான்றும் வழங்கப்படும்.     

திருமண ஜோடியில் குறைந்தது ஒருவர்  மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்,
மாற்றுத்திறனாளி அல்லாதோர்,
கணவனால் கைவிடப்பட்டோர்,
விதவை ( ஆண், பெண்)
விவாகரத்து  பெற்றோர்,
ஜாதி, மத பேதமில்லை என நினைப்போர் பங்கேற்கலாம்.

இலவச சுயவரம் ( தேர்வு) நடைப்பெறும் இடங்களும் தேதியும்:
1) ஜூலை 19ல்  - விழுப்புரம்  
2)  ஜூலை 26ல்  - திருவாரூர் 
3) ஆகஸ்ட் 16ல்  - ஈரோடு 
4) ஆகஸ்ட் 23ல்  - சென்னையில் 

திருமணம் நடைப்பெறும் இடமும் தேதியும்::
2015 டிசம்பர் 2ம் தேதி - சென்னையில் 

*திருமணத்திற்கு சட்ட திட்டங்களின்படி அரசு வழங்கும்  தாலிக்கான 4 கிராம் தங்கமும், வைப்பு நிதியும் கிடைக்கும் என நினைக்கிறேன் மற்றும் வேறு விபரங்களுக்கு, 96004 50676 மொபைல் ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

No comments: