செடி தந்த, பூத்த பூவிலே
உன் முகம் கண்டேன்.
அதுவிருக்கும் நிலையிலே,
நீ நிற்கும் நிலைக்கண்டேன்.
தலை கவிழ்ந்த பூவிலே - உன்
வெட்கச்சாயல் நான் கண்டேன்.
மலர் தந்த நிறத்தில் - உன்
வதனத்தின் நிறம் கண்டேன்.
காற்றாட கடந்த போது - நீ
அழைப்பதாய் நெருங்கி சென்றேன்
என்னிலே நீயிருக்க,
பூவிலே உனைக் கண்டு,
மயங்கிய எனைக் கண்டு, - நீ
நகைப்பதாய் நினைத்துக் கொண்டேன். 😍😊😊
No comments:
Post a Comment