Translate

Thursday, July 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண சலுகை விலை அட்டைகள்


தற்போது தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகியன ஆகும்.
சேலம் கோட்டத்திற்கு சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகை அட்டைகளை சேலம் ஜங்ஷன் (சந்திப்பு நிலையம்) கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, நேரிலும் தபால் மூலமும் அனுப்பியும் ரயில் பயண சலுகை விலை அட்டைகளைப் பெறலாம். அத்துடன் விண்ணப்பதாரர் தங்கள் மொபைல் போன் எண்ணையும் குறித்திருந்தால், எஸ்.எம்.எஸ் வசதி மூலமாக தகவலும் தெரிவிக்கப்படும்.
‪#‎மாற்றுத்திறனாளிகளுக்கு‬ சரியான தகவல்கள் எட்டாமையாலும், ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களைப் பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்கள், சமூகநலத்துறை அலுவலகங்கள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்கள் போன்ற இடங்களில் விண்ணப்பங்களை வழங்கும் வசதியை ஏற்படுத்தி தருவதுடன், அது குறித்த தகவலை ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை வழங்க கால நிர்ணயம் செய்யக்கூடாது என தமிழகத்தின் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
‪#‎தர்மபுரி‬, ஓசூர் எந்த ரயில்வே கோட்டத்தில் வருகிறது என்பது விபரமில்லை.
திருவனந்தபுரம் கோட்டத்தில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில் - திருநெல்வேலி மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த ஊர்களும் வரும். தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே நிலையங்களில் விசாரித்து தெரிந்துக் கொள்ளவும்.
அல்லது கீழ்காணும் முகவரியில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் திரு.எட்வர்ட் ஜெனி அவர்களையும் தொடர்புக் கொண்டு பயனடைலாம் என தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway User's Association (KKDRUA)
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanyakumari District
G.S.M : +91 9443002949
Visit our Facebook : www.facebook.com/Kanniyakumari

No comments: