Translate

Wednesday, July 1, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்



தமிழகத்தில், மாற்றுத் திறனாளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத் திறனாளிகளுக்கான  மாதிரி பள்ளியாக மாற்ற, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு இட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறை சூழல், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறை, குடிநீர், சாய்தள வசதி போன்றவற்றை மேம்படுத்த உத்திரவு இடப்பட்டுள்ளது.
வந்து செல்ல சிரமமில்லாத வகையில் மாதிரி பள்ளியை தேர்வு செய்யும் பணியுடன், நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- நாளிதழ் செய்தி,

#இதை வரவேற்கின்ற இச்சமயத்தில், ஒரு  மாற்றுத் திறனாளி என்ற முறையில் எமக்கு சில சந்தேகங்கள்:-


1) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழெனில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தானே, அருகில் உள்ள பள்ளிகளில் வந்து அனைத்து   மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து படிக்கயியலும்!
2) மாவட்டத்திற்கு ஒன்று என்றால், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து தங்கி படிக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதா?
*ஆமெனில்,
செய்தியில் தெளிவு படுத்தபடவில்லையே.
3) சிறப்பு வசதிகள் என்றால்,
a) நடக்கவியலா  மாற்றுத் திறனாளி மாணவர்கள் வகுப்பறையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாசிக்கவும்,
b) உயர குறைப்பாடு உள்ளவர்கள் அமரும் வகையில் உயர்த்தி தாழ்த்தும் வகையில் வசதியான தனி நாற்காலிகள் வழங்கப்படுமா?
c) பார்வை  குறைபாடு உள்ளவர்களுக்கு முன்னிருக்கைகளில் அமர வசதி, மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படுமா? 
d) பார்வையற்ற, செவி கேளா மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, அப்பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா? தனி சிறப்பு ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்படுமா?
4) கழிவறைகளின் அமைப்பு சாய்தளத்துடன்  இருந்தாலும், உயரமாக அமைக்கப்பட்டிருந்தால்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின்  அவசரத்துக்கு உதவாமல் அல்லல்பட வைக்கும் 
*தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைகள் அனைத்தும் சாய்தளத்துடன் அமைக்கப்பட்டிருப்பினும், தரைதளத்தில் வசதியாக சென்று பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உயரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கவனித்தில் கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் இலகுவாக பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதால், இந்திய வகை, மேல்நாட்டு வகையென இரு வகையும் கைப்பிடிகளுடன் கூடிய விசாலமான கழிவறைகள் சக்கர நாற்காலிகள் சிரமமில்லாத வகையில் உள்ளே சென்று திரும்பி வெளிவரும் வகையில் அமைக்கப்பட வேண்டும், சிறுநீர் கழிப்புக்கும் வசதியான அமைப்புகளை அமைக்க வேண்டும், உடனுக்குடன் சுத்தமாக, உலர்நிலையில் பராமரிக்க ஆண், பெண்  பணியாட்கள் நியமிக்க பட வேண்டும். 
*குறைவற்ற நீர்   வசதியும் செய்யப்பட வேண்டும் 


#மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை  வசதிகளுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், அவசரகதியில் இக்கல்வியாண்டிலேயே துவக்குவதை விட, சரியான திட்டமிடலுடன், முழுமையான வசதிகளுடன் உருவாக்கி அடுத்த கல்வியாண்டில் தாமதமின்றி செயல்படுத்தினால், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும்  சிறப்பையும் பெருமையையும் அளிக்கும்.

No comments: