உன் அழகை கண்டதும்
என் அழகை நான் மறந்தேன்.
கோள்களும் தீ பிடித்து எரிந்தது
வேகமான எண்ண உரச்சலால்.
அழகான உடுப்புகளையும்
அலசி அலசி நான் கலைத்தேன்.
அணிந்து அணிந்து பொறுமையின்றி
அவசரத்தில் எனை களைந்தேன்.
உனைக் கண்ட கண்களுக்கு
முக்காடிட்டு நான் மறைக்க,
பிறந்த நிலையில் நான்
பதுமையாய் கணங்களையோட்ட,
என்னை கண்ட முழு ஆடியும்
உற்சாக ஒலியெழுப்ப 🎶 🎶
உரித்த நிலையில் நான் .
சந்தேகித்தேன் யாரோவென. 🤔🙄
போட்டியிட்டன ஒன்றுடன் ஒன்று
உணர்வுகளுடன் செயல்களும்.
அத்தனையும் உடுத்திக் கொண்டு
உன் முன்னே ஒய்யார நடைப்போட.
மனம் தாவியது இதிலிருந்து
அலங்காரத்தில் அசத்த..
நான் அணியும் ஆபரணங்கள்
அதிர வேண்டும் நீயும். 🤨
ஆட்டத்தில், ஐய்யகோ..... 💃
அதிருதே மனமும் உடலும்.
ஆட்டுகிறது எண்ணங்களை
அந்தரத்தில் அப்படியும் இப்படியும்.
என்ன செய்வேன் நான்,
எண்ணியதை முடித்து பார்க்க.
எக்களமிடுகிறது மனம்
எப்படியும் வெற்றி அடைய.
கரைந்தது பொழுது
கனவில் நானிருந்து
கண் விழி த்திருந்தும்
கடக்க எண்ணியும் முடியாமல்
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
2014