Translate

Friday, October 31, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shanmuga Murthy






Shanmuga Murthy


வினை தீர்க்கும் விநாயகருக்கு தம்பியானாய்.
எங்களுக்கோ விளையாட்டு அண்ணனானாய்.
பெயர் கொண்ட அவனுனக்கு அருள் புரிய,
மகிழ்வுடனும் நலனுடனும் நாள் கழிய
பிரார்த்தித்தே வாழ்த்தினோம் அன்பாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷாண் அண்ணா


# எங்களுக்கிடையே 208 பரஸ்பர நண்பர்கள் ( Mutual Friends ) உள்ளனர். அனைவரையும் இணைக்க  முடியாததால் சிலரை மட்டும் இணைத்துள்ளேன். அனைவரும் பிறந்தநாளுக்கு வாழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள்,
தவப்புதல்வன்.



கடினமான செயலின் சரியான பெயர்

கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !


Tuesday, October 28, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tvn Tvnarayanan






Dt of Birth: 30/10/41
நலன்கள் யாவும் ஒன்று கூடி
நாயகனாய் உமை நிறுத்தட்டும்.
நாட்களும் கழியட்டும்
நலமோடு காலமெல்லாம்.
நாங்களும் பிரார்த்தித்தோம் 
நர்த்தனமிடும் நடேசனிடம்.
நலமோடும் மகிழ்வோடும்
இணையோடு இணைந்து
இனிதாய் வாழ, முன்கூட்டியே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.







ஹைக்கூ கவிதைகள்






தீராத ஆசையுடன்
தழுவுகிறது
''அலைகள்''

கரைக்கு
வந்து செல்கிறது
மக்களைப் போலவே
''அலைகள்''

தடைக்கற்களை
உடைக்கப் பார்கிறது,
வேகமாய் வந்து
''அலைகள்''

கண்
விழிக்க தவறுவதில்லை
தாமதமானாலும்
''சூரியன்''

அடுப்பில்லாமல்
எரியும் நெருப்பு
''சூரியன்''

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !

ஹைக்கூ கவிதைகள்



நிறைந்த மக்கள்
குறைந்த இடம் 
''மனம்''
தழுவி செல்லும்
காற்றெல்லாம்
கவர்ந்து செல்கிறதே
உன் வாசத்தை.
மேக மூட்டத்திலும்
எட்டிப் பார்த்து ரசிக்கிறது
''நிலவு''.
உன்னழகு
தனக்கிலையென்று
நானுகிறது
உனை வர்ணிக்கும்
''வார்த்தைகளும்''
நீரும் நெருப்பும்
ஒன்றாக குடியிருக்கிறது
உன் விழிகளில்.
முக்கண்ணனும் தோற்கிறான்
உன் விழிகளுக்கு முன்
''கனலில்''
உலகம் இருண்டு ஒளிர்கிறது
நீ இமை மூடி திறக்கும்
கணப்பொழுதில்
விளக்குகளும்
ஒளி வாரியிறைக்கிறது
நீ இருக்குமிடத்தில்
மொட்டுக்களும்
விரைந்து மலர்கிறது
நடமாடும் மலர்
உனைக் காண.
செயலற்றுப் போகிறது
உன் கோபத்திற்கு முன்
''இடியோசையும்''
நான் சிந்திக்கா பொழுதுகளில்
உன்னை சந்திக்கிறது
''நினைவு''
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !

ஹைக்கூ கவிதைகள்.



விரிகிறது இதழ்
பூக்கும் போதெல்லாம்
''புன்னகை''

நாணின்றி
வளையும் வில்
''புருவம்''

கணையின்றி
கணை வீசும்
காற்றிலது
''விழி''

அவசரப்பட்டது மனம்,
அல்லல் பட்டது விழி
''திறக்க''

எப்படித்தான் சொல்கிறதோ
ஆயிரம் கதைகள்
''விழிகள்''

கதை சொல்ல
எங்கு கற்றாய்
''விழியில்''

எப்படி கற்றுக் கொண்டாய்
தவறின்றி தாக்க
''விழிகளில்''

கண்களுக்கும்
உனைக் கண்டதும்
''தாகம்''

இராமர் வில்லும்
தோற்று விடுகிறது
உன்னிடத்தில்
''கணை தொடுப்பதில்''

புவியில்
இரண்டு
விண்மீன்கள்
.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே !



Monday, October 27, 2014

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கே.கே.மகேஷ்
COMMENT   ·   PRINT   ·   T+  

வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்





பாவலர். இராஜ. தியாகராஜன்

வண்டமிழ் பாவலரோ
பரவசமாய் பார்த்திருக்க,
புன்னகையோ அகத்தினிலும்
மலராய்  பூத்திருக்க,
படம் பிடித்ததையா
பளிரென ஒளிவீசி.

இனிய நாள் வணக்கம் பாவலரே..

https://www.facebook.com/photo.php?fbid=993755720640370&set=a.158691114146839.38380.100000178538631&type=1&theater


பாவலர். இராஜ. தியாகராஜன்
அவர்களின் விளக்கம்

கவிஞர்Dhavappudhalvan Badrinarayanan A M மிக்க நன்றி உங்கள் இனிய 

கவியுரைக்கு.


மிளிர்ந்திடும் கணித்திரை விழியத்தைக் காண்கையிலே,

பளிச்சென்றே செல்வனவன் படுசோராய் சொடுக்குகையில்


வெளிப்பட்ட மகிழ்வென்னும் விந்தையென, கரைகாணாக்


களிபொங்கும் நிகழ்வெனவே கணப்போது படமிதுவே:



எமது பதில் நன்றி:

ஆஹா...
சொக்க வைக்கிறது உமது நடை.
சொல்லறியா எமக்கது முடை.
பண்டமிழோ பாவலருக்கு உடை
நடைபோடுமே என்றுமது  படை.


மிக்க மகிழ்ச்சி பாவலரே.
தமிழன்னை பால் புகட்டியமைக்கு.

Sunday, October 26, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரனே







 பிறந்தநாள் காண்ட  எமது சகோதரனுக்கு நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே!

வார்த்தைகளுக்கு வேலையில்லை 
உம் செயல்களுக்கு முன்னாலே.
குறியொன்றே முன்னிற்க,
குன்றிலேறி நீ உயர,
உச்சியிலிருந்து அருளளிப்பான் 
துதிக்கையான். 
உன் வேண்டுதலுக்கு 
துணையிருப்பான் உன்னுடனே 
சிறப்பான நிலையடைய.
வாழ்த்தினோம் மகிழ்வாக 
வளமோடு நலமாக வாழத்தான்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரனே. 

உரையாடுதலில்



ஏனோ மறந்து விட்டேன் 
எழுதுகின்ற முறையினிலே.

எழவில்லை நாவும் 
ஏட்டிலிருந்து நாட்டியமாய் 

ஏங்கியே தவிக்கின்றேன் 
ஏனிந்த மாற்றமென்று.

ஏறுமோ நாவினிலே 
என் நினைவு சொற்களும்.
தடுமாற்றம் இல்லாமல்  
தயக்கம் ஏதுமின்றி
 
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்






திருமணமான 33 வருடங்களில் எம் மனைவியார் திருமதி.ராஜராஜேஸ்வரி அம்மையார் அவர்களுக்கு,   முதன்முதலாய்  கூறும் பிறந்தநாள் வாழ்த்திது.

சொற்களுக்கு உருவமாய் நீரிருக்க,
வாழ்த்திட சொற்களுக்கு எங்கு போவேன்?
சிந்திய சொற்கள் சில சேர்த்து வைத்தேன்.
அதை இணைத்தேன், இன்றுமை வாழ்த்தி விட.
உருண்டோடும் நினைவுகளோ வாழ்வின் ஓட்டத்திலே,
புதுமையாய் இருக்குமிது முதலாய் இன்றுமை ஆராதிப்பதால்.
நலமுடன் நீர் இருந்து, மகிழ்வுடன் என்றுமே வாழ,
இறைவனை பிரார்த்திக்கிறேன், எம் இணையாய் ஆனதிலிருந்து.
மீதமிருந்த சொற்களை வாரிரைத்தேன் 
நினைவுகள்  பூமழையாய் நனைத்திடவே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எம்மினிய சீமாட்டியே.


Saturday, October 25, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sinniah Thiyageswaran




Sinniah Thiyageswaran

புவியிலே இன்று
புதிதாய் பிறந்தது போல்
எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறதோ
மீண்டுமதை.

நலனும் மகிழ்வும்
என்றுமே நிலைத்திருக்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. 

Friday, October 24, 2014

மாற்றுத்திறனாளிகள் - கல்வி உதவித்தொகை





அகில இந்திய தொழிற் கல்வி கவுன்சிலின் 2014-15ம் கல்வி ஆண்டில் 
முதலாமாண்டு டிப்ளமோ அல்லது பி.இ. படித்து வரும் 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கும் 
கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
*30/10/2014க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

‪#‎நண்பர்கள்‬ தங்கள் பக்கங்களிலும் பகிர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களும் பயனடைய செய்ய கேட்டுக் கொள்கிறேன்

நன்றி: Lokesh Monk

இனிய நாள் வாழ்த்துக்கள்



தூய நீலத்திலே வானமிருக்க,
துள்ளி வந்ததோ பரிதியும்  
தூக்கம் கலைந்து
துயிலெழச் செய்ய.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - ‎Su Po Agathiyalingam





நாளும் பொழுதும் விரைவாக
நடந்ததே  விரைவான  நொடிகளாய்
நாட்களோ ஒவ்வொன்றாய் கரைந்து விட
நகர்ந்து விட்டதே 23 வருடங்களது.
நடந்ததை நினைத்துப் பார்ப்பதிலும் சுகமுண்டு.
நடக்க வேண்டுமென எண்ணுவதிலும் சுவையுண்டு.
நகர வேண்டும் இறைவன் துணையோடு.
நலமோடு வாழவே அருள  வேண்டும்.
 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



‪#‎தோழர்‬ சு.போ.அகத்தியலிங்கம் அவர்களின் 23வது திருமணநாளை முன்னிட்டு 

பதித்தித்துள்ள இவ்வாழ்த்தில் இருவருக்குமிடையான அனைத்து நண்பர்களையும் 

இணைக்க முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் 

நண்பர்கள் அனைவரும் வாழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இனிய ஹிஜ்ரி 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்





புறப்பட்டு வந்த
புத்தாண்டு
புரிதலைத் தந்து
புதுமையை நல்கட்டும்.

புனிதத்தை உரைத்து,
புகழடைய செய்யட்டும்.
மனையிலே மங்களம் பெருகி,
மகிழ்வினை நல்கட்டும்.

இனிய ஹிஜ்ரி 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

Thursday, October 23, 2014

குறுங்கவிதை






தெரியாமல் விழித்தேன்
தெரிந்ததும் வியந்தேன்
தேடும் உறவு
தேடி வந்ததை அறிந்து.

இனிய காலை வணக்கம் நட்புகளே.

Wednesday, October 22, 2014

இனிய ஆயுஷ் ஹோம வாழ்த்துகள் - ஸ்ரீ S.M.ரங்கமன்னார் அவர்களுக்கு ( 78ம் ஆண்டு பிறந்தநாள் )


எட்டெட்டாய் நடைப் பயன்று 
ஏற்றமது அதுவடைந்து 
பத்தெட்டோ தொடும் தூரத்திலே..

பழகும் வித்தை அறிந்தவரே 
பாடம் சொல்லித் தந்தவரே. 

பயணிக்கும் பாதைகளோ 
பக்குவமான நிலையினிலே. 
இனிமையாய் தொடர்ந்தது 
இனியும் உமக்கமைய, 

பண்டரிபுறத்தான் அருளளித்து 
பக்கமாய் உமக்கிருந்து 
பலமதை தருவாரே. 

அவனடி தொழுதே 
நாங்களும் பிரார்த்தித்தோம் 
வாழ்நாள் முழுவதுமே 
நீங்களிருவரும் நலமாய் வாழ்ந்திடவே.

இனிய ஆயுஷ் ஹோம வாழ்த்துகளுடன் நமஸ்காரங்களும் 
தேவரீர் பாவாவுக்கும், லஷ்மிகரம் பொருந்திய அக்காவுக்கும்  


A.M.பத்ரி நாராயணன் 
ராஜராஜேஸ்வரி 
மற்றும் குடும்பத்தினர் அனைவரும்


Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.






மின்மினிப்பூச்சிகளாய் வானமெல்லாம் மினுமினுக்க,
கிளம்புகின்ற வெடியோசை அண்டத்தையே அதிர வைக்க,
பார்க்காத கோலமெல்லாம் பரப்பரப்பாய் சுற்றிக்காட்டி,
வண்ணத்துளிகளாய் பொங்கி நீயும் பூமழையாய் இறங்கும் போது,
 கண்களெல்லாம் பரவசத்தால் பூரிக்குமே விழி விரித்து.
ஆகாச நிலவை நோக்கி ஆகாசவாணம் விட்டு 
அது  வாரியிறைத்து சீறி விழும் அழகு காண்போம்.ஆனந்தமாய்.
மழையில்லா புகைமேகம் வானத்தை மூடிக் கொள்ள,
உற்சாகமோ புரண்டோடும் விழாக்கோல மகிழ்வுகளில் 

நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

#எல்லையில்லா மகிழ்வோடு கொண்டாடுங்கள்.
#எச்சரிக்கையாய் கொண்டாடுங்கள்.


Monday, October 20, 2014

இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - Pranav

ராஜேஷ் ஹரிகிருஷ்ணன் & ஸ்ரீ வாசவி பிரியா அவர்களின் செல்ல மகன் பிரணவ் பிறந்தநாள் வாழ்த்து.



உனை புகழும் நாட்களெல்லாம்
மகிழ்வாய் உனக்கிருக்க,
இன்றுமது மகிழ்வான
நிலையில்  நீயிருக்க,
நாட்களெல்லாம் ஆனந்தமாய்
உனதுயர்வோ சிறப்பாய்,
என்றுமே நலனுடன் நீயிருக்க
ஆசிகளை வழங்கினோமே
அன்புடன் உனக்கின்று.

Wish you Happy birthday Pranav

ஆசிர்வாதங்கள்
தாத்தா, அவ்வா.




இனிய நாள் நல்வாழ்த்துக்கள்





சிலுசிலுப்பாய் விடியலோ துவங்க,
சிந்தனையில் ஆயிரம் நினைவுகள் இருக்க,
சீர்படுத்தி ஒன்றாய்
சித்திரம் வரைந்து,
சிறப்பான நாளாய்
இனிதாய் துவங்க
இனிய நாள் வாழ்த்துக்கள்  நண்பர்களே.

இன்றைய ஸ்பெஷல் ( சிறப்பு ) - குறுங்கவிதைகள்






எங்கேயோ நாடகம் 
இங்கே கூட்டம் 
வானத்தில் மேகங்கள்.
---------------------------------------------
வானத்தையும் வளைத்து 
கூடாரம் போட்டது 
''மேகம்''
--------------------------------------------

மகிழ்ச்சியா?
துக்கமா?
தெரியாமல் பொழிகிறது 

''மழை''
-------------------------------------------------

வீதியில் மழை  
குழந்தைகளுக்கு
சிறைச் சாலையாய்  
''சன்னல்கள்''


-------------------------------------------

திரைச்சீலை இல்லாமலே 
ஒவியம் வரைகிறது  
''மின்னல்கள்''
-------------------------------------
நடனம் கற்காமலே 
நாட்டியமாடுகிறது 
''மின்னல்கள்''
---------------------------------------


ஒலிப்பெருக்கி 
இல்லாமலே 
கர்ஜிக்கிறது 
''இடி''
------------------------------------


தந்தி அடிப்பதை 
மறக்கவில்லை 
''பற்கள்''
-------------------------------------------------

குளிரும் 
காய்கிறது 
''தீசூவாலையில்''
-------------------------------------------------------

அடுப்பிலிட்ட 
சட்டியும் நடுங்குகிறது 
''குளிரால்''
-----------------------------------------------

ஒப்பனை செய்து 
அழகு பார்த்தது.  
''வானவில்''
--------------------------------------------

இடைக் காட்டாமலே 
வளைந்தது  காட்டியது
''வானவில்''
 ------------------------------------------

வானத்திலிருந்து 
ஒரு சறுக்கு பாதை 
''வானவில்''
----------------------------------------------
மழைக்கு பின் தோன்றும் 
ஓர் அழகிய தோரணம் 
''வானவில்''
----------------------------------------------

நெசவாளி நெய்யாத 
ஒரு அற்புத ஆடை 
''வானவில்''
------------------------------------------
 
மிக்க மகிழ்வுடன் இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.





Sunday, October 19, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - இராசசேகரன் சீதாராமன்






இராசசேகரன் சீதாராமன்

எட்டெட்டில் நடை பயின்று
எட்டி விடும் தூரத்தில்
எழுபதையும் நலமாக
ஏறிடுவீர் மகிழ்வாக.


எழும்புகின்ற நினைவுகளில்
எத்தனையோ எண்ணங்கள்.
எழுதுகின்ற இந்நாளில்
இறைவனையே பிரார்த்தித்தே
வாழ்த்தினோம் உமையின்றே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

ஹைக்கூ





ஒவ்வொரு இதழும்
மற்றொரு இதழைத் தேடுகிறது.
உரசிப் பார்க்க.

Saturday, October 18, 2014

வாழ்த்துவோம், புரிந்துக் கொள்வோம்.








பக்கவாதத்தினால் கால்களை இழந்த தனது குழந்தைக்கு 

தகுந்த ஷூக்களை தயாரித்து தன்கூடவே நடக்க வைத்துக் கூட்டிச் 

செல்கிறார்.

மனம்!!!





தழுவி விட நினைக்கின்றேன்
தள்ளியே நிற்கிறதே.
தவிக்கின்றேன் தனியாக,
தருகின்ற சுகமறிய. .
தாமதமின்றி விரைவாக,
தருமோ அது எனக்கு.
''ஆழ்ந்த உறக்கத்தை''
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

Friday, October 17, 2014

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ‎Murali Kasipathy







புதிதாய் பிறந்தீரோ  
பூமியிலின்று.
புலர்ந்த வேளையோ 
பூரிப்பாய் துவங்கி,
புது வேகமுடன் 
புறப்பட்டு வந்ததோ 
புன்னகை பூத்த முகமுடன்
புதுமையை வாழ்த்த..
புத்துணர்வு நலனுடன் 
என்றும் இளமையாய் மகிழ்வாய் வாழ.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சின்ன அல்லுடுகாரு 

Thursday, October 16, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Nisha Nisha



Nisha Nisha

வாழ்த்துக்கள் மழையோ
வந்துமை நனைக்க.
வாடாத பயிராய்
செழிப்பாய் இருக்க,
நினைவிலே மகிழ்வுகள்
நீந்திக் கொண்டிருக்க,
வந்துமை வாழ்த்தினோம்
வளமோடு  நலமாய் வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களம்மா!!! 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Chidambaram Kasiviswanathan





Chidambaram Kasiviswanathan

மணம் வீசும் தென்றலில்
மனமது மயங்க.
மகிழ்ச்சியில் நினைவோ
மண்வாசனை இருக்க,
மறவா நெஞ்சங்கள்
மனமார வாழ்த்த,
நலமோடு இனிதாய்
பல்லாண்டு வாழ,
வாழ்த்தினோம் உம்மை
இறைவனை பணிந்தே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Wednesday, October 15, 2014

அவரை வாழ்த்துவோம் போற்றுவோம். Dr. .A. P. J. Abdul Kalam






அணு விஞ்ஞானி
ஆற்றல் உடையவர்,
அஞ்ஞானம் விலக்கியே 
ஆளாக்க துடிப்பவர்
அவரை ஒதிக்கியே வைத்தாலும்
அசராதவர்.
அவர் பணியை நிறைவாக
ஆக்கமுடன் செய்பவர்.
ஆர்வமுடையவர்
அன்னை பாரதம்
அனைவராலும் போற்றப்பட
அயராது உழைப்பவர்.
முன்னாள் மூத்த குடிமகன்
ஆம் அவரேதான்
டாக்டர். அப்துல் கலாம்.
அக்டோபர் 15 பிறந்தநாள் .
ஐயா, தாங்கள் பல்லாண்டுகாலம் நீடூழி நலமுடன் வாழ ஆண்டவரை பிரார்த்தித்தே இனிய இப்பிறந்த நன்னாளில் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.

சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.


....
தீபாவளிக்கு சீனப்
பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப்
பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ
வையுங்கள்....
வெளியுறவுக் கொள்கையின்
ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப்
பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய
அனுமதி கேட்டால் அரசாங்கத்தால்
தடை சொல்ல முடியாது.
ஆகவேதான்
வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில்
ரூ 2000
கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து தமிழன்
தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்ய
முடியாததை தமிழர்களாகிய நாம்
செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள்
வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய
அந்த சுயநல வணிகர்கள்
தயங்குவார்கள். வியாபாரம்
குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள்
நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....
சீனா உங்கள் தேசமல்ல, சீனப்
பொருட்கள் உங்கள் உள்நாட்டுத்
தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்...
சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத்
தொழிலை நசிக்கப் பார்க்கும்
சீனாவை நாம் உள்ளே நுழைய
விடலாமா?
நீங்கள் சிவகாசிப்
பட்டாசு வாங்கவில்லை என்றாலும்
பரவாயில்லை !... ஆனால்
சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்
தலையிலும் தயவுசெய்து தீ
வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம்
இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து,
வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து,
தினம் செததுப் பிழைக்கும்
சிவகாசிப் பட்டாசுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க்
குடும்பமும்
உங்களை காலமெல்லாம்
வாழ்த்தும்.....
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம்
பகிருங்கள்...

Tuesday, October 14, 2014

ஆனந்தம்.



ஆழ்ந்த நினைவிலே
அழுத்தமான பிரார்த்தனை
அன்புடைய  நெஞ்சுக்கு
அள்ளித் தருமே சுகம்.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.


Saturday, October 11, 2014

ஒரு வேண்டுகோள். - இன்றொரு தகவல்



இனிய நட்புகளே!  மகிழ்வான ஞாயிறாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் பகுதியில் உள்ள அல்லது தெரிந்த முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களில் உள்ளவர்களும், வருகின்ற தீபாவளியை கொண்டாடி மகிழும்படியாக உங்களால் இயன்ற உதவியை செய்து, நீங்களும் தீபாவளியை மிக  மகிழ்வாக கொண்டாட வாழ்த்துகிறேன் நண்பர்களே!

#உங்கள் நண்பர்களுக்கும் இச்செய்தியை தெரிவியுங்கள்.

வந்தானம்மா... வந்தனம்...



வந்தானம்மா... வந்தனம்...

இனிய நட்புகளே! மகிழ்வான ஞாயிறாக அமைய வாழ்த்துக்களுடன், இனிய இப்பாடல் தொகுப்பைக் கேட்டு ஆடிப்பாடி மகிழ்வாக கழியுங்கள்
 

சிறு கதை - இன்றொரு தகவல்.





மிக  வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், ஒரு விதை நாட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த 

பேரன்:  என்ன தாத்தா செய்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? 

தாத்தா: விதை நட்டுக் கொண்டு இருக்கிறேன்.

பேரன்:  என்ன விதை தாத்தா 

தாத்தா: மாமர விதை 
பேரன்: இது மரமாக வளர எவ்வளவு நாளாகும் 

தாத்தா: 15 வருடம் ஆகும்.

பேரன்:  காய்கள் எப்போது காய்க்கும்?

தாத்தா:  அதற்கு பின்தான்.

பேரன்:  சுவை எப்படி இருக்கும் 

தாத்தா: மிக மிக சுவையானவை. தின்ன தின்ன திகட்டாது.

பேரன்:  நீங்கள் இதை சாப்பிட்டு இருக்கிறீர்களா?

தாத்தா: இல்லை. சொன்னார்கள். அதற்காகத்தான் நாடுகிறேன். 

பேரன்:  (பலமாக சிரித்துக் கொண்டே )  இப்போது இருக்கும் நிலையில், அந்த மரம் வளர்ந்து, கனி கொடுத்து, அதை நீங்கள் ருசித்து பார்ப்பதற்கு உயிரோடு இருப்பீர்களா என்பதே தெரியாத போது, எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு இந்த விதையை  நடுகிறீர்கள்?

தாத்தா: (புன்னகைத்தவாறே) பேராண்டி, இது எனக்காக நடவில்லை. நான் ருசிக்காத, இந்த பழத்தின் ருசியுடன், தூயகாற்று, இதமான சுற்றுசூழலை  நீங்களும், உங்கள் தலை முறைகளும் அனுபவிக்க  வேண்டும் என்பதற்காக தானடா, என்றார்.  
பேரன்:  பலர் சொத்து சுகங்களை சேர்த்துக் கொண்டிருக்க, தலைமுறைகள் நல்ல உடல் நலத்துடன் வாழ நினைத்த உங்கள் அருமையான உள்ளத்தை புரிந்துக் கொள்ளாமல், கேலி செய்து பேசி விட்டேன். தாத்தா என்னை மன்னித்து விடுங்கள். 

நானும் இனிமேல் சுற்றுச்சூழல் சிறக்க பாடுபடுவேன், உங்களைப்போலவே என கண்ணீர் மல்க கூறியபடி கைக்கூப்பினான்.

#என்ன நண்பர்களே! நாமும் சுற்றுசூழலைக் காக்க, நம்மால் முடிந்ததை செய்யத் தொடங்குவோமா?