Translate

Saturday, October 11, 2014

சிறு கதை - இன்றொரு தகவல்.





மிக  வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், ஒரு விதை நாட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த 

பேரன்:  என்ன தாத்தா செய்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? 

தாத்தா: விதை நட்டுக் கொண்டு இருக்கிறேன்.

பேரன்:  என்ன விதை தாத்தா 

தாத்தா: மாமர விதை 
பேரன்: இது மரமாக வளர எவ்வளவு நாளாகும் 

தாத்தா: 15 வருடம் ஆகும்.

பேரன்:  காய்கள் எப்போது காய்க்கும்?

தாத்தா:  அதற்கு பின்தான்.

பேரன்:  சுவை எப்படி இருக்கும் 

தாத்தா: மிக மிக சுவையானவை. தின்ன தின்ன திகட்டாது.

பேரன்:  நீங்கள் இதை சாப்பிட்டு இருக்கிறீர்களா?

தாத்தா: இல்லை. சொன்னார்கள். அதற்காகத்தான் நாடுகிறேன். 

பேரன்:  (பலமாக சிரித்துக் கொண்டே )  இப்போது இருக்கும் நிலையில், அந்த மரம் வளர்ந்து, கனி கொடுத்து, அதை நீங்கள் ருசித்து பார்ப்பதற்கு உயிரோடு இருப்பீர்களா என்பதே தெரியாத போது, எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு இந்த விதையை  நடுகிறீர்கள்?

தாத்தா: (புன்னகைத்தவாறே) பேராண்டி, இது எனக்காக நடவில்லை. நான் ருசிக்காத, இந்த பழத்தின் ருசியுடன், தூயகாற்று, இதமான சுற்றுசூழலை  நீங்களும், உங்கள் தலை முறைகளும் அனுபவிக்க  வேண்டும் என்பதற்காக தானடா, என்றார்.  
பேரன்:  பலர் சொத்து சுகங்களை சேர்த்துக் கொண்டிருக்க, தலைமுறைகள் நல்ல உடல் நலத்துடன் வாழ நினைத்த உங்கள் அருமையான உள்ளத்தை புரிந்துக் கொள்ளாமல், கேலி செய்து பேசி விட்டேன். தாத்தா என்னை மன்னித்து விடுங்கள். 

நானும் இனிமேல் சுற்றுச்சூழல் சிறக்க பாடுபடுவேன், உங்களைப்போலவே என கண்ணீர் மல்க கூறியபடி கைக்கூப்பினான்.

#என்ன நண்பர்களே! நாமும் சுற்றுசூழலைக் காக்க, நம்மால் முடிந்ததை செய்யத் தொடங்குவோமா? 



No comments: