Translate

Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Saturday, July 6, 2013

நினைவுகள் - இனிய மாலை வணக்கங்கள்

நினைவுகள்

அப்பாவின் நினைவோ
அம்மாவிடம் இருக்க,

அம்மாவின் நினைவோ
மகனிடம் இருக்க,

மகனின் நினைவோ
அவளிடம் இருக்க,

அவளின் நினைவோ......
"
"
"
"
"
"
இனிய மாலை வணக்கங்கள் நட்புகளே!





Friday, June 27, 2008

நாள் ஒன்றிலே !....

நிலையாய் நினைவிலே
நில்லுங்களேன் நினைவுகளே.

செய்யும் செயலை
செம்மையாய் செய்திடவே.

வந்தது வரட்டுமென
வருவதை வரவேற்று,

நல்லது நடக்க
நலமதை நவில்வோம்.

எது என்று
எனை எண்ணியே,

ஏன் ஏங்கினேன்,
ஏதுமில்லா ஏமாற்றத்திற்கு.

அதுயென்று, அதற்கென்று
அலைந்தேன் அனைத்துக்குமே.

ஆகையால் ஆட்பட்டு-
ஆடினேன் ஆனந்தமில்லாமலே.

ஓராயிரம் ஓரங்களில்
ஓடிய ஓடம்,

ஒதுங்குமே ஒன்றுமில்லா-
ஒப்பனைகளாய் ஒரு புறத்திலே.