Translate

Showing posts with label விடைத் தெரியா கதை. Show all posts
Showing posts with label விடைத் தெரியா கதை. Show all posts

Monday, June 18, 2007

விடைத் தெரியா கதை

சிந்தனைகள் சிறகடிக்கின்றன
ஒருங்கிணைப்பு இல்லாமலே.
திசைகளிலும் நேரத்திலும்
இயக்கத்திலும் ஒன்றுபடாமலே.

முகமறியா வேதனைகள்
பொசுங்குது நெஞ்சு கூட்டுக்குள்ளே.
பீரிட்டு வெளியேறும்
புகைச்சல்களின் நெடி
சிந்திக்க விடவில்லை
ஒரு நொடி.

பறக்கத் துடிக்குது
திசையொன்றையும்
அறிந்துக்கொள்ளாமலே.

சுழலில் சிக்கும் கோள்களே
திசையின்றி சிதறும்போது
எங்கே கட்டுப்படப்போகிறது
என் மன(மு) ம்.



  • http://www.facebook.com/note.php?note_id=156900574368282&comments

    வாசக அன்பர்களின் சிந்தனை சிதறல்கள்:-
    • M Venkatesan MscMphil சிந்தனைகள் சிறகடிக்கின்றன
      ஒருங்கிணைப்பு இல்லாமலே.
      March 7 at 5:17pm · · 1 person
    • Jayanthy Morais சுழலில் சிக்கும் கோள்களே
      திசையின்றி சிதறும்போது
      எங்கே கட்டுப்படப்போகிறது
      என் மன(மு) ம்.
      March 7 at 5:54pm · · 1 person
    • Shanmuga Murthy
      முகமறியா வேதனைகள்
      பொசுங்குது
      நெஞ்சுக் கூட்டுக்குள்ளே...

      பொருத்தமான வரிகள்..நண்பரே
      ...See More
      March 7 at 6:47pm · · 3 people
    • Sadeek Ali Abdullah
      ஆமாம் சிலநேரம் மனம் கட்டுப்படாது தான்... ஆனாலும் கட்டுப்படுத்த (தியானப்) பயிற்ச்சி மேற்கொண்டால் பயன் தரும்...

      கண்ணதாசனின் வரிகளில்
      ====================

      ...See More
      March 7 at 9:01pm · · 3 people
    • வீரபாண்டியன் Veera
      ‎///முகமறியா வேதனைகள்
      பொசுங்குது நெஞ்சு கூட்டுக்குள்ளே.
      பீரிட்டு வெளியேறும்
      புகைச்சல்களின் நெடி
      சிந்திக்க விடவில்லை ///
      ...See More
      March 7 at 9:39pm · · 2 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் கருத்துக்களை வாசிக்க வாசிக்க மகிழ்வாயிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி சகோதரர்கள், சகோதரியே. இரவு வணக்கம்.
      March 7 at 10:13pm · · 2 people
    • Vishnu Rajan அருமை நண்பரே ..சிந்தனைகள் என்றுமே நமது கட்டுக்குள் இருந்ததில்லை தான் நண்பரே .. நல்ல கவிதை !
      March 7 at 11:03pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia எங்கே கட்டுப்படப்போகிறது என் மன(மு) ம்.// அருமை வரிகள் சார்... சிந்திக்க வைக்கிறது!
      Tuesday at 4:53am · · 2 people
    • Palaniappan Chidambaranathan Rajapalayam மிக்க நன்று தோழரே !
      Tuesday at 5:55am · · 2 people
    • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
      அருமையான் கவிதை. வாழ்த்துக்கள்
      அன்புடன்
      சக்தி
      Tuesday at 7:35am · · 1 person
    • Mohamed Ali ‎//சுழலில் சிக்கும் கோள்களே
      திசையின்றி சிதறும்போது
      எங்கே கட்டுப்படப்போகிறது
      என் மன(மு) ம்// வாழ்த்துக்கள்
      Tuesday at 10:06pm · · 1 person

      வரவேற்ற திலகங்கள்:-