Translate

Showing posts with label சோபனா பிறந்தநாள் வாழ்த்து - 2009.. Show all posts
Showing posts with label சோபனா பிறந்தநாள் வாழ்த்து - 2009.. Show all posts

Tuesday, July 14, 2009

மனதினிலே உறுதிக் கொண்டு!!!

சோபனா பிறந்தநாள் வாழ்த்து - 2009.
நித்தம் நித்தம் எண்ணமயம்.
நினைவெல்லாம் உந்தன் வசம்.
நினைவுகளெல்லாம் வாழ்த்துகளாய்
உனைச் சுற்றி பறக்குது இன்று.
கழிந்தது வருடம் ஒன்று.
கூடியது வயது ஒன்று.
கற்றக் கல்வியை அள்ளிக் கொண்டு,
அனுபவத்தை துணைக் கொண்டு,
மனதினிலே உறுதிக் கொண்டு,
நினைவுகளில் நிறுத்திக் கொண்டு,
வெற்றியெனும் ஒளிவெள்ளம்
ஒளி கீற்றாய் முன் விரிய,
அழுத்தமான உன் நடையால்,
புகழ் மகுடம் நீ அடைய,
கரடு முரடு வழியையெல்லாம்
மென்பஞ்சு பாதையாகி,
வெற்றி நடையை துவக்கி வை.
முதல் படியில் துணிந்து வை.
தயக்கத்தை தகர்த்து விடு
தாமதமின்றி துவக்கி விடு.
இன்றே முதலாய் இருக்கட்டும்,
இனிதாய் என்றுமே நடக்கட்டுமென
இனிய உன் பிறந்த நாளில் அன்புடன்
வாழ்த்தும்,
அப்பா, அம்மா, அக்கா.

பின்குறிப்பு: சிறிது காலதாமதமாக பதிவு போடப்பட்டது.