Translate

Showing posts with label சொல்லம்பு. Show all posts
Showing posts with label சொல்லம்பு. Show all posts

Friday, March 13, 2015

சொல்லம்பு

அச்சொல்லே உள்நுழைந்து
ஆறாமல் போனதேனோ?
கௌரவமென  நினைத்துக் கொண்டு
மௌனமாய் கடக்கின்றோம்.
எதிரெதிரே  பார்த்தாலும்
எதிரியாய் ஒதுங்குகிறோம்.
நெருங்கிட நினைத்தாலும்
 நேசத்தின் குறுக்காக
நெருஞ்சியாய் அந்நினைவு
நெஞ்சத்தைத் துளைக்கிறது.

ஆவலுடன் அழைத்திட்டோம்
ஆசையுடன் அணைத்திட்டோம்
தூபமிட்ட  எண்ணத்தால்
தூவப்பட்ட அவ்வார்த்தை
துண்டிக்க தூண்டிவிட
துணையிருந்தும் தவிக்கின்றோம்

காலமது கழியுமுன்னே
வாழ்க்கை மீண்டும் துளிர்த்திடுமோ
இனிமையுடன் இளமையாய்
இணைந்து நாம் நடைப்போட,
அத்தனையும் துறந்து விட்டு 
ஒருவரோடு ஒருவராக,
நினைவுகளை  ஒதுக்கி விட்டு  
 சரணதை அடைவோமோ

 காலத்தின் கோலத்தில்
கலைத்துக் கொண்டோம் வாழ்வுதனை.
கடந்ததை எண்ணியெண்ணி
காலத்தைப் போக்காமல்
பகையை தூரம் விரட்டி விட்டு
 பாசத்தை மட்டும் அளந்திடுவோம்.
நினைவுகளால் தீய்ந்து கருகி போகாமல்
நித்தமும் சுகத்திலே ஆழ்ந்திருப்போம்.
என் நினைவும் உன் நினைவும்
ஒன்றாக கூடிவிட்டால்,
ஜெகத்தின் அகத்திலே
குன்றென உயர்ந்திருப்போம்.