Translate

Showing posts with label நட்பு துரோகம். Show all posts
Showing posts with label நட்பு துரோகம். Show all posts

Saturday, January 27, 2018

நட்பு துரோகம்


நட்பென தோளிலிட்டாய்
நல்லுறவென தலையசைத்தேன்.
நஞ்சுகளோ உன் மனத்தில்
நயவஞ்சகம் செயலனைத்தில்.

மூச்சுகளிலும் உள்ளுறைய,
மூழ்கினேன் உணராமல்.
முட்புதரான உன் நினைவுகள்
முனைகளோ வெகு கூர்மை.

திட்டங்களை நீ போட,
தீட்டும்போது நானினைப்பேன்
திறமை உனது பெரிதென்று – அறியவில்லை
தீண்டதகாத நட்பென்று.