Translate

Showing posts with label இனிய திருமண நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய திருமண நல்வாழ்த்துக்கள். Show all posts

Sunday, November 1, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - ௮கிலேஷ் சங்கர் ஐயர்


சிரஞ்சீவி ௮கிலேஷ் சங்கர் ஐயர் 

இணையும் உள்ளங்கள்
இறுக்கமாய் இணையட்டும்.
தளராமல் அன்பு
தழைத்தோங்கி வளரட்டும்.
முன்கூட்டிய  இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பூங்குயில்களுக்கு.

#நண்பரே, விருந்துணவை, மறக்காமல் 
விரைந்து அனுப்புங்கள்

விண்ணூர்தி மூலம். :P  

Saturday, May 30, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - கிருத்திகா & அசோக் Dt: 01/02/2013


ஏட்டுப் படிப்பினிலே
வெண்ணிலா போன்று
ஏற்றம் கண்டவளே,
கூடும் குடும்பத்திலே
கூடட்டும் என்றும் மகிழ்வலை.

ஓராயிரம் கனவுகள்
ஒவ்வொன்றாய் நிறைவேற.
ஓயாமல் செயல்பட்டு
ஒப்பற்ற நிலையுடன் நீ....

வீறுநடை போடும்
அஸ்வின் குமாரின் கரம் பிடித்து
விண்ணிலே வலம் வரும்
விளக்கொளியாய் ஒளிரட்டும்
குடும்பமுடன் உன் வாழ்வும்

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
அவளே உன் அன்னை - அந்த 
'ஆதிலக்ஷ்மி' யின் உயிரே

உடனிருந்த தோழனாய்
உயர்வுக்கு காட்டியாய்
உடமைக்கு உரியவராம்
அசோக்  புதல்வியே.

கரம் பிடிக்கும் இந்நாள்
புனிதமான நன்னாள்.
இன்றுபோல் எந்நாளும்
இனிதான நினைவுகளுடன்
மகிழ்வும் நலனும்
நிலையாய் நிலைக்க

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கிருத்திகா.

அன்புடன் நல்லாசிகள்,
B.சத்யநாராயணன்
சுபாஷிணி  நாராயணன்

ஆக்கம்: தவப்புதல்வன் 

Sunday, March 29, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - சிரஞ்சீவி அம்ருதேஷ் S/o Sri.Sankar Mani Iyer - ஸௌபாக்கியவதி மானசி



Sri.Sankar Mani Iyer அவர்களின் பெரிய மகன் சிரஞ்சீவி அம்ருதேஷ் - ஸௌபாக்கியவதி மானசி தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

அடையும் நலங்களெல்லாம்
இறைக் கோர்த்த  மலர்களாய்
வாடாமல்
என்றுமே செழிப்பாக நிலைத்திருக்க
பிரார்த்தித்து வாழ்த்தினோம் மகிழ்வாக.

இளம் தம்பதிகளுக்கு நல்லாசிகள் உரியதாக்குக நண்பரே.

Monday, March 16, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

ஈருடல் ஆயினும்
ஒரு மனமாய் கலந்து,
குடும்பமெனும் விதை,
விருட்சமாய் செழித்து
பல்லாண்டு பல்லாண்டு
நலமாய் வாழ 


இனிய திருமண நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Friday, January 30, 2015

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்






சௌபாக்யவதி..ஸ்ருதி  - சிரஞ்சீவி.கஜேந்திரன்

இரு மனமாயினும்
ஒன்றென  கலந்து,

குடும்ப வாழ்வது
கோபுரமாய் உயர்ந்து,

பிணைந்த உறவு
புதுமைகளைப் படைக்க,

இறைவனின் அருளது
என்றுமே நிலைக்க,

வளரும் நாட்களில்
நலனுடனும் மகிழ்வுடனும் வாழ,

இனிதான நினைவில்
இன்றுமை வாழ்த்தினோம்



இனிய திருமண நல்வாழ்த்துக்கள்  இளங்கிளிகளே.

நல்லாசிகள் வழங்கும்
தாத்தா A.M பத்ரி நாராயணன்  பாட்டி.ராஜராஜேஸ்வரி 

Monday, November 24, 2014

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - கவிஞர் மைக்கல்கொலின்






கவிஞர் மைக்கல்கொலின் 

உள்ளங்களோ கொடிகளாய் பிணைந்திருக்க,
மலர்களாய் வாரிசுகளோ பிறப்பெடுக்க,
உறவுகளோ இயற்கையான உரமாக,
வாழ்வோ செழிக்கட்டும்  மிக மகிழ்வாக.

மகிழ்வான திருமண நல்வாழ்த்துக்கள்.

Monday, June 9, 2014

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்



தோழ்ர் கார்ல் மார்க்ஸ் With மகாலட்சுமி


தோழர் தோழியை தோளோடு சேர்த்தணைத்து,
உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றென கலந்து
நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.



இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

Monday, September 15, 2008

அனுப்பாத கடிதம்

நோக்காமல் நோக்கிருந்தேன்.
உம் மணவிழா காணவே நோக்கிருந்தேன்.
இடையிலா இறுமாப்பு
இடையினிலே தோன்றியதால்
கற்பனையில் காணிடவே
கருத்தறிந்து நீ(ங்)க்கி விட்டான்.


மண்ணோடு மண்ணாக
கரையும் உடல் இங்கிருக்க,
ஆவி மட்டும் அலைந்ததுவே
சடங்கிலே கலந்துக் கொள்ள.
கூறு போட்ட மனங்களினால்
குறி வைத்து தாக்கப்பட்(டு) ட,
துடிக்கின்ற உள்ளமோ,
சிந்துகின்ற துளிகள் ஒவ்வொன்றும்
சிதறித்தான் போகிறது. 

கறைகளாய் காய்கிறது.

எது எப்படி இருந்தாலும்
நீங்கா நினைவுகளில்
நிலைத்திருப்பாய்,
நித்தமும் துதித்திருப்போம்
உன் வாழ்வு
துளிர்கட்டுமென்று.
திகட்டாத தேனாய்
வாழ்வே இனிக்கட்டுமென்று
ஆசிகளை அனுப்பி வைத்தோம்
ஆனந்தமே நிலைக்கட்டுமென்று.


அன்புடன்,
மாமா
ஏ.எம்.பத்ரி நாராயணன்
@ தவப்புதல்வன்.