Translate

Tuesday, October 31, 2017

புது பாடம் - 2



தள்ளாடலில் நீ
தனிமையில் நான்
மயக்கம் - ஏக்கம்

பகலில் மிதக்கிறாய் நீ
இரவில் பறக்கிறேன் நான்
கற்பனை - கனவு

வேகவில்லை உன்னிடமும் 
நடக்கவில்லை என்னிடமும் 
பொய்யும் - புரட்டும்

சந்திக்க போகிறாய் நீ
சந்திக்க செல்கிறேன் நான்
விடியல் - இரவு  

மயக்கமுடன் வீதியில் நீ
மயக்கத்தில் வீட்டில் நான்
போதை - பசி

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Chelliah பூ மணமாய் அவன்
பூநாகமாய் நீ
புதுமை-பொறாமை


வேகிறதோ அவன் மனம்
வேகவில்லையிவனிடம்.
நோயும் - நோன்பும்.

சோதிக்கப்பார்க்கிறானவன்...
சாதிக்கப்பார்க்கிறானிவன்..
வக்கிரம் - முயற்ச்சி

கள்போதையிலே அவன்..
கல்விப்பாதையிலிவன்
தலைக்கனம் - தமிழறிவு

முத்தினக்கத்திரிக்கா..
இத்தின பூசணிக்காய்..
இடக்கு - மடக்கு

இவைகளும் என் விரல்களின்
மணல் எழுத்தே!!!
பொன்னெழுத்துக்குமுன்...
பின்னெழுத்தே
என்னெழுத்தே!!
தவக்கமுயல்கிறேன் நான்...
தள்ளிவிகிறதே
வங்கக்காற்று!!!

வாங்கி வந்த வரமெனக்கு
வருந்துகறேன்
தினம்நினைத்து

நன்றிகள்...
தவழும் தம்பிரான்
இரா.செல்லையா..
31-10-2017
( 17.36 )


Reply
1
Yesterday at 5:36pm
Remove

தவளும்
மொழியழகு.
தள்ளாடா

நடையழகு.
தவிக்கின்ற
நிலையழகு.
சொற்களில்
படைப்பழகு.
துள்ளுகின்ற
தமிழழகு.
நட்பிலே 
நீரழகு.😍😂🌹🌹🌹🌹🌹🙏
LikeShow more r
Chelliah " தவளென "
சுட்டிக்காட்டி
தட்டிக்கழிக்காமல்...
ஒட்டி உறவாடல்
ஓராயிரம் வராகன்
பொன் மனம்.

தவிக்கின்ற
தவிப்பிற்கு
தவறாத அன்பளிப்பூ...

தள்ளாடும்
நடையும்கூட
தமிழுக்குத்
தனியழகே...

ஆற்றுக்கு
நீரழகு..
அன்பிற்கோ
நீரழகு..
நட்புக்கு 
நா அழகாம்
நாம்வாழும்
தமிழ் விழியால்
நல்லவற்றைக்
கற்று வைப்போம்..
சுவையருவி
தமிழுறவே
செப்பிட்டேன்
நன்றிகளை...
நட்பே......🍎🍇🍒🍍🍊🍊🍊🍊


Wow
Reply
1
24 mins
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M Chelliah 

நற்கனிகள் பலவளித்து
நணலை உண்டாக்கி
நவிலும் உம்மழகு,
உம்மிலே சிறப்பழகு.

நற்பண்பாய்
நன்றிகளை 
நான் நவில,
புகழ்மாலை
சூடியெமை
நாணிட செய்கின்றீர்


ReplyJust now

Chelliah ஆராதனை
அன்பிற்கும்
நட்பிற்கும்
மாலையிடும்
மகிழ்ந்திருக்கும்
நாணமும்
நாணலாகும்
நாற்புறமும்
நன்றி சொல்லும்


Haha
Reply
1
Just now

Monday, October 30, 2017

புது பாடம் - 1

புது பாடம் 🤔😜

இல்லாத உறவு
இருக்கின்ற நினைவு
கடந்தும் - கடக்காமல்

பார்வையில் பட்டது
படாமல் போனது
தெரிந்தும் - தெரியாமல்

ஓடமாய் நான்
ஓட்டமாய் நீ
நீரிலும் - நிலத்திலும்

பறந்தது ஒன்று
விரிந்தது ஒன்று
கோபம் - புன்னகை

இல்லாத செயல்
இருக்கும் நிலை
முயற்சி - தயக்கம்.


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.