Translate

Showing posts with label இதுக்கு மேலே சொல்லனுமோ?. Show all posts
Showing posts with label இதுக்கு மேலே சொல்லனுமோ?. Show all posts

Wednesday, January 31, 2018

இதுக்கு மேலே சொல்லனுமோ?



காத்தாட வரவில்லை
களையெடுக்க ஆட்களில்லை
கணக்கிலோ 

நிறைய மக்கள் வேலையிற்றி
ஏனோ தயங்குது
சேற்றிலே கால் வைக்க.
தனியாக நான் வந்தேன்
களையெடுத்து பேணி காக்க.

கிராமத்து சந்தடிகளும்
அடங்கி போன இடமிங்கு.
தனிப்பொழுதை நான் கழிக்க,
தெம்மாங்கு பாட்டொன்றை
தனியாக நான் பாட,
காற்றினிலே கீதமாக
பறவைகளின் கதம்ப ஓசை.

நாத்து நட்டு களையெடுத்து
பயிரு வளர்க்க படும்பாட்டை,
பாவிகள் உணர்வாரோ,
விருந்தென பந்திகளில்
வீணாக்கும் அக்கூட்டம்?
துளியேனும் நினைப்பாரோ,
துன்பப்படும் எங்களைத்தான்.

பொருக்கா நிலையினிலே
பொங்கி நாங்கள் கதறுகபிறோம்.
காதிருந்தும் கேளாதவர் போல்
கதவடைத்துக் கொள்கின்றார்.

பொய்த்து போகும் நாட்களில்
பொல்லா கடன் பட்டு,
அடைக்க முடியா பொழுதினிலே
அடைத்துக் கொள்(ல்)கின்றோம்
எங்கள் குடும்பத்துடன் மூச்சுகளையே.

புரிந்துக் கொள்வீரோ இனியேனும்
புரிய வைப்பீரோ அம்மூடர்களுக்கு.
பச்சையாய் பார்த்து விட்டால்
அவர் மூக்குகளோ வியர்க்கிறது.
நாங்கள் படும்பாட்டை உணர்வாரோ,?
பாராமுகமாய் செல்வாரோ?

விடையென்றேனும் கிடைக்குமோ?
கிடைக்கும் காலமதில்
நாங்களும் தான் இருப்போமோ?
இயற்கையைத்தான் தொழுதிடுவோம்
எங்கள் குடும்பம் விரிவடைந்து
வயலுடன் வாழ்வும் நிலைத்திருக்க.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
 

#வாழ்த்துகள் குழு படப்போட்டியில்  (30\01\2018 ) வெற்றி பெற்ற கவிதை🙏