அற்புதத் தமிழரசி
அருளும் சொற்களெல்லாம்,
ஆனந்தமாய் இருக்குதடா,
அமிர்தமாய் ருசிக்குதடா.
அடங்கா காளையாய்
அங்குமிங்கும் துள்ளியபடி,
அழகான உருவிலே
அகிலம் முழுதும் சுற்றுதடா.
ஆரத்தழுவிக் கொண்டாட,
அரிய வார்த்தைகளில் உறவாட,
ஆயிரமாயிர வண்ணங்களில்
அழகுக்காட்டி ஒளிருதடா.
ஆரவாரம் ஏதுமின்றி
அறியும் நிலை ஏற்படுத்தி,
அன்பை அள்ளிக்கொடுத்து
ஆளச்செய்து மயக்குதடா.
அகண்ட சுரங்களிலது மிளிர,
ஆழ உழுதுப் பார்க்கையிலே
அபூர்வ காட்சிகள் பல கொடுத்து,
ஆலாபனை செய்ய ஊக்குதடா