Translate

Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts
Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts

Tuesday, July 28, 2015

கண்ணீர் அஞ்சலி - மாமனிதர் அப்துல் கலாம்


விதைத்த விதைகள் முளைக்கும் முன்னே
காலச்சக்கரம் விரைந்துமை அழைக்க,
விண்ணகம் சென்றீர்,  திரும்பா நிலையுடை
விண்ணூர்தி போல.

எங்களின் விழியோ ஊற்றென பொங்க
சிதறும் விழிநீர் மார்பை நனைக்க,
தூவா செய்தோம் மீண்டும் நீர் பிறந்து
பாரதத்தின் கோட்டையை கட்டி முடிக்க.

நீர் நட்ட விதைகள் துளிர்த்திட வேண்டும்
செழிப்பாய் அவையாவும் வளர்ந்திட வேண்டும்
நாளைய பாரதம் உழைப்பால் உயர,  
உம் ஆசைகள் யாவும் ஆசிகளாக வேண்டும்

உலகம் போற்றும் வல்லரசாக
இந்திய நாட்டை மாற்றிட எண்ணி 
நாளைய தூணில் நம்பிக்கைக் கொண்டு
நயம்பட உரைத்தீர் நற்பண்பு வளர.

வளரும் தலைமுறை உம் வழிதனில் நடந்து
இளைய தலைமுறை மனத்தினில் பதித்து
அக்னி பறவையாய் சிறகுகளை விரித்தால்
வசப்படும் விண்ணும் கைக்குள் அடங்கி.




மனத்தின் வலிதனை அறிந்தவர் உணர்வார்.
மரணத்தின் இழப்பினை யாதென்று உரைப்பார்.
மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு
மண்டியிட்டு அஞ்சலி செய்வோம்.


Friday, February 1, 2013

கண்ணீர் அஞ்சலி

எமது சகோதரி திருமதி.பிரபாவதி அவர்களின் கணவரும், தாய் மாமா மகனுமான ஜெனார்த்தனம் அவர்களின் மறைவை ஒட்டி இரங்கற்பா...



அனுபவித்தது போதுமென்று
அறியா வழி நோக்கி
அந்தரத்தில் விட்டனையோ
அருங்குடும்பத்தினையே!

ஆசைகள் போதுமென்று
அடைத்து விட்டு போனீரோ ?
அத்தனை நிகழ்வுகளையும்
அழித்து விட்டு சென்றீரோ?

ஆழ்கடல் மௌனமாக
அமிழ்ந்ததோ நின் பேச்சு?
அளவற்ற நினைவலைகள்
அலையடித்தது எம் மனத்தில்.

ஆதி முதல் அந்தம் வரை
அறிந்தவர் யாருமில்லை.
ஆற்றல் பெற்றவராய்
ஆட்டுவித்தீர் அனைவரையும்.

அங்குசமாய் உம் செயல்கள்
ஆனை(ணை)களாய்  பலர் அடங்க,
அறியாமல் போனீரே
ஆயுதத்தின் வலிமையையே.

அல்லலுறும் நிலைக்கொடுத்து ,
ஆட்டுவிக்கும் ஆண்டவனின்
அருளென்று கூறாமல்
அடைக்கலமானீர் ஏன் விரைந்து?