2006
உடைந்தது வீணை மட்டுமா 🤔
நாதமும் சேர்ந்தல்லவா.
உறவுயெனும் பசை
கெட்டியாக இருக்கலாம்.
ஒட்டிய பின்னும்
பிசிரடிக்கிறதே நாத்ததிலே.
காட்சியாக வைக்கலாம்
ஒட்டிய வீணையை.
வைக்க முடியும்
காட்சியாய் மட்டும்.
முழுமையாய் இசைக்கயியலுமா
அதன் நாதத்தை?
எடுக்கும் போதும்
பார்க்கும் போதும்
உறுத்துமே அதன் பிசுறுகள்.
நாதத்தை இழந்து விட்டோம்
தவற விட்ட செயலாலே
முழுமையாய்.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
2
#20062