Translate

Showing posts with label அண்ணார் A.R.V. அவர்களுக்கு அஞ்சலி. Show all posts
Showing posts with label அண்ணார் A.R.V. அவர்களுக்கு அஞ்சலி. Show all posts

Monday, April 26, 2010

யாரும் அறியா நிலையினிலே!

உறவை எல்லாம் விலக்கித்தான்

உலகைப் படைத்த இறையிடம் தான்

உடலை விட்டு பிரிந்துத்தான்

உயிரும் நீங்கிப் போனதை தான்

உறவும் அறிந்த நிலையில் தான்

உணர்ந்து உருகி போனதில் தான்

உகுக்கும் கண்ணீர் துளிகள் தான்

உமக்கு செலுத்தும் அஞ்சலி தான்.

பின்குறிப்பு:
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரரும், எமது பெரியப்பாவின் மூத்த மகனுமான A.R. வெங்கடேசன் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி செலுத்தப்பட்ட கண்ணீர் அஞ்சலி கவிதை.
பூத்தது:24 /02 /1936.
உதிர்ந்தது: 16/04 /2010 .