Translate

Showing posts with label கணினியென்ன புதைக்குழியா?. Show all posts
Showing posts with label கணினியென்ன புதைக்குழியா?. Show all posts

Thursday, June 7, 2018

கணினியென்ன புதைக்குழியா?





முகம் கண்ட உறவுகளும்,
உடன்பிறந்த பிறப்புகளும்
உற்றத்துணை சுற்றமும்,
உடன் வளர்ந்த நட்புகளும்
கணினியில் தொலைந்து போக, 13

கணினிக்குள் முகம் புதைய,
சுற்றிருக்கும் நிலையறியா
சடலமாக உருவிருக்க,
சதையில்லா உயிரோட்டம்
உணர்வில்லா கணினிக்குள்.
காணும் மாயம் அத்தனையும்
கண்ணுக்குள் நிறைந்திருக்க,
கனவுகளில் மிதக்கின்றார்,
கடவுளையே கண்டதுப்போல். 33

உடனின்றி குழி பறிக்கும்
குள்ளநரிகள் ஏராளம்.
வார்த்தைகளில் சொக்குப்பொடி
வளைக்கும் கும்பல்கள்.
சுருட்டிக் கொள்ளும் அதற்குள்ளே
பொருளுடன் மானத்தையும். 47

பகுத்தறியும் கலைகளுண்டு
பருகி தூய்க்க படங்களுண்டு.
நேசத்திற்கு அளவு கொண்டு
நேசித்தால் மகிழ்வுமுண்டு., 57

நேரத்தைக் கருத்தில் கொண்டு
நேர்வழியில் பயணித்தால்,
புகழடைய வழியுமுண்டு. 64

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M