தழும்பியது நீராங் காங்கே
தளுக்கி குலுங்கிய இடையாலே.
தவித்துத்தான் போனேனே
தங்கமவளை கண்டதுமே.
தன்னந்தனியா வந்தாலும்
தயங்கித்தான் நான் நின்றேன்.
தயங்காமல் அவள் பார்வை
தாவியது என் மேலே.
தாடுமாறி நானும் தான்
தலை குனிந்தேன் ஒரு நொடியே.
தங்கக் காசுகள்
தரையில் சிதறியதைப்பொல்
தன்னிச்சையாய் சிரித்தாளே.
தள்ளாட்டாமாய் அவள் நடிக்க
தாவித்தான் சென்று விட்டேன்
அவளருகே.
தன் விழிகளை இமைத்தவளாய்
தன்னிலையை உணர்த்தினாளே
கலகலவென சிரித்தப்படி.
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
முகநூல் சந்திரோதயம் குழுவில் படக்கவிதை.நடுவரின் கருத்தும் பதிலும்