Translate

Thursday, February 1, 2018

தண்ணீர்_குடம்_சுமந்த_தங்கமே



தழும்பியது நீராங் காங்கே
தளுக்கி குலுங்கிய இடையாலே.
தவித்துத்தான் போனேனே
தங்கமவளை கண்டதுமே.
தன்னந்தனியா வந்தாலும்
தயங்கித்தான் நான் நின்றேன்.
தயங்காமல் அவள் பார்வை
தாவியது என் மேலே.
தாடுமாறி நானும் தான்
தலை குனிந்தேன் ஒரு நொடியே.
தங்கக் காசுகள்
தரையில் சிதறியதைப்பொல்
தன்னிச்சையாய் சிரித்தாளே.
தள்ளாட்டாமாய் அவள் நடிக்க
தாவித்தான் சென்று விட்டேன்
அவளருகே.
தன் விழிகளை இமைத்தவளாய்
தன்னிலையை உணர்த்தினாளே
கலகலவென சிரித்தப்படி.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

முகநூல் சந்திரோதயம் குழுவில் படக்கவிதை.நடுவரின் கருத்தும் பதிலும்

காவிய சேகரன்Group Admin மோனை கவியோடும்
சோனைச்சொல்லோடும்
மனதில் ஒட்டும் கவியழகு

அத்தான் என்றே
அத்தைமகள் வந்திடுவாள்
சத்தான உங்கள் கவியை
சலிக்காமல் உண்டிடுவாள்
முத்தான மொழியாலே
முன்னூறு கதைபேசி
முழுமையான கவிதை போல்
முழுதாய் மனதை தந்திடுவாள்
Manage
LoveShow more reactions
Reply2h
Dhavappudhalvan Badrinarayanan A M காவிய சேகரன்ஆழகான சொல் கோர்த்து
ஆனந்தத்தில் மிதக்கவிட்டீர்
துள்ளுகின்ற இளமீனாய்
துறுத்துறுக்கிறது நினைவலைகள் 
நன்றியென நா சுழற்றி
நான் குவித்தேன் கரங்களைத்தான் ஐயா
🙏🙏
Manage
LikeShow more reactions
Reply54m

No comments: