Translate

Thursday, February 1, 2018

இதுக்கு மேலே ஹூ.. ஹூ.. ஹூம…


வயல்வெளிகள் சுற்றியிருக்க,
வண்டினங்கள் மொய்த்திருக்க,
இடையோ அசைந்தாட, - நீ
இடையிடையே துள்ளிக் குதிக்க,
இளமைகளும் இசைப்பாட,
விழிகளைச் சுழற்றியபடி,
தெம்மாங்கு பாடிக் கொண்டு,
தனி வழியே வர்ர பொண்ணே…

சின்னக்குயில் இனியவளே
பசியோடு நானிருக்க.
கைவீசி வருவதென்ன?
கலயத்தை மறந்ததென்ன?
சுற்றிப் பார்க்க வந்தாயோ? – எனை
சுத்தி வளைக்க வந்தாயோ?

முன்னே வரும் கொலுசோசை
கொஞ்சம் கொஞ்சமாய் மயக்குதடி.
பற்றிய காதல் மயக்கத்தால்
பசி மறந்து போவேனோ?

பக்கத்தில் வந்த பின்னே
உன்னை கண்ட மோகத்தில்,
நான்
விரைந்தணைத்து கொள்வேனோ?
கலையமில்லா நிலைக்காக
கடிந்துதான் கொள்வேனோ?

மாமனின் வலுவாலே
கிழங்காக மினுக்குகிறாய்.
அத்தை ஊட்டிய பாலாலே
அளவின்றி இனிக்கின்றாய்.

செழுமையாய் அங்கங்கள்
செழுத்திருக்கு வயிலைப்போல,
சொல்லக்கூடாது இதுக்கு மேலே
என்னவளாய் இருப்பதாலே.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: