Translate

Saturday, February 10, 2018

பழகுவோம்


நெல்லு குத்தின காலம் போச்சி.
காட்சி கொடுக்குற காலமாச்சி.
ஆளுக்கோர் படி நெல்ல
குத்தியெடுத்தா
ஆனானப்பட்ட குடும்பமும்
அமர்ந்துண்ணும் வயிறார.
சத்துக்கும் சத்தாச்சி,
உடலும் பலமாச்சி
நோய்நொடியும் பறந்து போச்சி
காசும் பணமும் மிச்சமாச்சி.
உருப்படியா பொழுதும் போகும்.
உறவுகளும் பலமாகும்.
உற்சாகம் புரண்டோடும்.
காட்சிகளினி வேண்டாமம்மா.
கடமையாய் செய்வோவம்மா.
முறத்தாலே புலி விரட்டின
தமிழிச்சிப் போல,
துடிப்பாக வாழ்வாயம்மா.
முடிந்தளவு செய்வோவம்மா.
மூக்கால் அழுக வேண்டாமம்மா.
உடம்புகள் வீங்கி போக
வெட்டியாய் பொழுதுபோக்கி,
பயிற்சிக்கென செலவு செய்து
வீண் சிரமம் வேண்டாமம்மா.
துணைக்கு அவனையும் இழுத்துக்கோ,
தூண்போல வளத்துக்கோ.
நலமுடன் வளமாய் வாழ்விருக்க,
வழக்கத்தையினி மாத்திக்கோ.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
🙏

No comments: