Translate

Friday, February 16, 2018

மழைத் தாக்கம்




கடகடவென்ற இடியோடு, படப்படவென மின்னலடிக்க,/
சரசரவென பெருமழை நாள் முழுக்க பொழிந்தோட,/
குப்பைகளையும் இழுத்துக் கொண்டு, சலசலவென சாலையில்,/
சாக்கடை நீருடன் கலந்தபடி.
மடமடவென ஓடியது./
சடசடவென ஒலியோடு  ஆங்காங்கே சாய்ந்தந்த மரங்களால்/
கிடுகிடுத்த மக்களோ, இடையிடையே, சளக் சளக் ஒலி கேட்க தள்ளாடியபடி நடந்தனர்./
துறுத்துறுவென குழந்தைகள் – மகிழ்ச்சியுடன்
துள்ளித்துள்ளி குதித்தனர் ஓடுமந்த மழை நீரில்./
சிலுசிலுவென குளிர் காற்றும் சேர்ந்துக் கொண்டது வாட்டியெடுக்க./

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.

#இலக்கக் கவிதை = இரட்டைக்கிளவி

No comments: