Translate

Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

Sunday, July 14, 2019

ஹைக்கூ கவிதைகள்

எழுதாத ஒப்பந்தம் 
முழுமையாய் நிறைவேறினால் 
குடும்ப பந்தம் 




இல்லாத பாதையில் 
இயங்குகிறது இயந்திரம்  
மண்ணுக்குள் மண்புழு 





தவப்புதல்வன் 
பத்ரி நாராயணன் 

Thursday, July 11, 2019

ஹைக்கூ

1




1) விவசாயியின் ஆசை 
     அடைப்பட்டுப் போனது 
     நீர் வரத்து.


2) அவன் கண்ணீர் 
     வறண்டு போனது 
    நீர் நிலைகள் 


தவப்புதல்வன் 
பத்ரி நாராயணன் A M 




































Friday, April 13, 2018

ஹைக்கூ கவிதைகள்



எங்கும் பிச்சைக்காரர்கள் கையேந்தி
கூட்டமாய் அலைந்ந்தனர்
அரசின் இலவசத்திற்காய் மக்கள்.


வரண்ட மார்பில் பாலூட்டும் தாய்
பார்க்க பரிதாபமாய் இருந்தது
பசிக்கு எச்சிலிலை பொருக்கும் காட்சி.

கைதிகள் சீராய் விரைந்தனர்
மணி அடித்ததும்
தட்டுடன் சத்துணவுக்கூட குழந்தைகள்.

தவப்புதல்வன் ✍️


பத்ரி நாராயணன்.A.M.

நிலாமுற்றம் 130418

Tuesday, March 6, 2018

தேரோட்டம்



வரயியலா மக்களுக்கு
தேரில் வந்து காட்சியளித்தான்
‘’இறைவன்’’

===============================


இறைவனின் தேரோட்டம்
பக்தர்களின் அருளாட்டம்
கூடியது பெருங்கூட்டம்\


======================
ஆண்டவனின் திருவுலா
தேரிலே அவன் உலா
மக்களும் உடன் உலா


=======================
எங்கும் இருப்பவன்
மக்களின் மனத்தில் இல்லாமலா
‘’இறைவன்’’


தவப்புதல்வன் ✍️

A.M.பத்ரி நாராயணன். 🙏