Translate

Friday, September 30, 2016

ஓரங்க நாடகம்

எண்ணங்களின் சங்கமம் மனத்திலே நிகழ,
உணர்வுகளின் துடிப்பு, உடலிலே தெரிய,
எல்லையற்ற மகிழ்வால் முகமும் சிவக்க,
இதழ்களும் விரிந்தது, புன்னகை சிந்தி,
தாலாட்டியது மார்பு, உயர்ந்தும் தாழ்ந்தும்.
நினைவுகளின் ஓட்டம் நிற்காமல் ஓட,
அனுபவத்தின் சுவைகள் கலவையாய் ருசிக்க,
சூழ்நிலை(யால்) நடனமிட்டது 
விரிந்த இமைகளுடன் விழித்த விழிகளும்.
ஆனந்த காற்றோ, சுட்டெரித்த வெம்மையோ,
எச்சரிக்கை மணியாய் 
விழிகளின் ஓரம் நீர்துளி திரள,
உடனடி தடையென உத்தரவு பிறக்க,
துளிர்த்த விழிநீர் தொங்கலில் நிற்க.
காரிருள் நிலையாய் மௌனமோ சூழ,
விரைந்தது கைகள்,விரல்களால் ஒற்ற.
காலத்தின் நேரமோ காற்றாய் கரைய,
நிகழ்வுகளின் தாக்கம் எழுத்திலே பொங்க,
ஒப்புதல்களின்றி உணர்வுகள் அடங்க,
தன்னிச்சையாக கடமைகள் தொடர,  
 ஓரங்க நாடகமாய் நிகழ்ந்தது அனைத்தும்.

உன்னில்


உணர்வில் நீயிருக்க
உன்னுடன் நான் கலக்க
உற்சாகம் ஊற்றெடுக்க
உழவு சிறப்படைய
உழைப்புக்கு பலனாக
உள்ளங்கை நிலையாக
உருக்கொண்டு முறையாக
உதயம் தோன்றுதடா.


உண்ணா நோன்பிருந்தோம்
உருவேற்றிப் பிரார்த்திருந்தோம்
உயிருக்கு உயிராய் எனக்கிருக்க
உலகம் புதுகோலம் பூண்டிருக்க
உன்னிலை தளராமல்
உனக்கு நான் தோளாவேன்
உள்ள மகிழ்வுடனே
உண்மை உரைத்தேனடா.


உங்களின்,
தவப்புதல்வன்.

Thursday, September 29, 2016

உமைப்போல



அறியாத பொருளறிய
அழைத்தேன் உம்மை.
நகர்ந்து விட்டீர் - ஏனோ
நக்கலாய் நகைத்தபடி.

அறியா சொற்கள்
ஆயிரம் பலவிருக்க,
அதிலொன்றாய் இதுவிருக்க
அறிய செய்வதில் தயக்கமென்ன?

நீரறிந்த மொழியறிவை
நான்றிய கூடாதா?
மொழியும் ஒதுங்கிடுமோ (மா)
அறிய செய்ய விருப்பமின்றி
தனைக்காட்ட விருப்பமின்றி

உள்ள அறிவில் ஏரோட்டி
தெரிந்த மொழியில் ஆடி பாட (டி)
அனுதினமும் முயல்கிறேன்
மொழியறிந்த உமைப்போல (லே)

Monday, September 26, 2016

நல்வாழ்த்துகள்

அன்பில் உனை கலந்து 
நட்பில் எனை நனைத்தாய்.
இனிதாகட்டும் நட்புடன் நாட்களும் கவிக்குயிலே. 🎉

 
அடியாளாய் உமையேற்று
அம்பாள் அருள் பொழிய.
ஆனந்தமாய் நீரென்றும்
ஆண்டுகள் நூறெனினும்
நலமோடு நீர் வாழ
வாழ்த்தினோம் மகிழ்வோடு. 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோ. 


இன்றைய நாளும் 
இயல்பாய் அமைய,
இறைவனோ, இயற்கையோ
இனிமையை நல்க,
இயங்கட்டும் வாழ்க்கை 
இலகுவாய் தெளிவாய்.

🙏 வணக்கமுடன் வாழ்த்துகள்💐 அன்பு நட்புகளே!  

Sunday, September 25, 2016

ஒரு தலைக்காதல்




ஒரு தலைக்காதல், என்றுமது செல்லாது.
அவளிடம் காதலை சொல்லத் தெரியாது.
ஏற்கா காதலென்றும் இனிக்காது.
இல்லா உரு ஒன்றைக் கொடுத்து,
இருப்பை நீ அழித்துக் கொள்ளாதே.
 
காத்திருக்கும் காலங்கள்  போக,
கனவிலது பகுதியாய் நிலைத்து போகும்.
விண்ணிலே அவள் தாரகையாய் மறைந்து போக 
வீணாய் உன் வாழ்வு கலைந்து போகும்.
வீம்பாய் நீயும் செயல் பட்டால் 
இடிந்து போகுமே இருவர் வாழ்வும்.
 
காதலென்பது உண்மையானால் 
காக்க நினைக்குமே அடுத்தவர் வாழ்வை.
பூசிக்க நினைக்குமே நினைவிலே என்றும்.
புரிந்துக் கொள்வீரோ இனியேனும்?
 

விழித்திடு


நீள(ல)மான உன் நிலையால் 
நெருஞ்சியாய் என் நினைவு.
அசைத்திட முடியவில்லை 
ஆழமாய் பதிந்ததால்.

அரசின் தடையில்லை 
புகைக்கிறேன் என்றாயே .
விஷத்திற்கும் தடையில்லை 
அருந்துவாயோ நீயுமதை .

புகையென புகைந்து போகும் 
உன் நிலையை தனதாக்கும்.
தகதகக்கும் உன் உடலுடுப்பு.
தத்தளிக்கும் உன் உள்ளுறுப்பு.

''பாடி'', ஸ்ட்ராங்காக தெரிந்தாலும் 
''பேஸ்'' மட்டம் வீக்காகும்.
அலசி நீயும் உறுதிக் கொண்டால்,
நலன்கள் வந்து அனைத்துக் கொள்ளும்.

முடியும் வரை புகைத்திடுவேன் 
முடியா நிலையில் பார்த்துக் கொள்வோம் 
முடிவதினை நீயெடுத்தால் 
முடித்திடுமே முடிவுவுனை முந்திக் கொண்டு.

பரந்த உலகில் கணக்கெடுத்தால் 
பத்தில் ஒன்றாய் இருந்தாலும் 
விரும்ப மாட்டாய் நீயுமதில் 
கணக்கிலொன்றாய் சேர்ந்து விட.

இருள் கவியும் நேரத்திலே 
சூரிய நமஸ்காரம், 
நல்லதென நீ நினைத்தால் 
நாறிவிடவும் வாய்ப்பிருக்கு.

புகைக்கும் உன் செயலால் 
புகை செல்லும் பாதையெல்லாம்
புகைகிறதே உடனிருக்கும் 
புகைக்காத உன் குடும்பம். - உன்
புகைத்தலால், பாவியாய் 
புதைக்குழிகளை திறக்கிறா(ய்)யே  

நாளொன்றில் நிறுத்திவிட 
முடியா நிலையை நானறிவேன்.
சிறிது சிறிதாய் குறைத்து விடு,
புகைக்கும் உன் செயலை.

புதைத்திடும் காலமோ  
பூங்குழி நேரமோ 
பூவரித்த எழும்புகளும் 
புரதமில்லா உடலுடனும் 
புவித்தாயின் மடியினிலே 
புரண்டிடுவாய் புரட்டிடுவர் அந்நேரம்.


--
இஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Friday, September 23, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தோழமையோடு தோள் கொடுத்து,
வந்தோர்க்கு வழி காட்டி,
நம்பிக்கை நிலை நாட்டி,
இளைஞனாய் செயல்படும்
உம்மையவன் அருள்கூட்டி,
நலமுடன் பல்லாண்டு நீர் வாழ
வாழ்த்துகள் பகிர்ந்தோம் மகிழ்வாக 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே

உங்களில் ஒருவன்
மறவா தோள்மையுடன்,
AM பத்ரி நாராயணன்
மாற்றுத்திறனாளர் நண்பன்

@தவப்புதல்வன்

Thursday, September 22, 2016

இப்பொழுது - குறுங்கவிதைகள்

மனம்

நான் சொல்ல முடியாதோ
நீ கேட்க மாட்டாயோ
நிலையின்றி துடிக்கிறேன்
உணர்த்த வழியின்றி.


================

நான்

பிழைத்துக் கொண்டேன்.
அருளிய இறைவனுக்கு நன்றி.
உதவிய உனக்கு மகிழ்ச்சி.

===============

இப்பொழுது

நெடிய இரவுகள்
நிறைய கனவுகள்
நிரந்தரமாய்
நீ மட்டும்.


=================
 

Wednesday, September 21, 2016

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.




கைப்பிடித்த மணாளனோ
களிப்புடனே துணையிருக்க,
தூண்டிவிட்ட  விளக்காக
சுடர்  விட்டு நீ  பிரகாசிக்க,
கள்ளமில்லா புன்னகையுடன்
நலமும், வளமும் பெற்று நீங்கள்
என்றென்றும் இளமையுடன்
வாழ்கவென வாழ்த்தினோம்

இனிய திருமண நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


காலையில் விழித்தேன்
விழித்ததும் நினைத்தேன்

மனமெங்கும் நிறைந்து
மகிழ்வு பொங்க

இன்பமுடன் என்றும்
இனிதாய் நீ வாழ,

இயற்கை வழியில்
கொண்டாடும் உமைக்கு

நட்புதனை எண்ணி
நலம்பட உரைத்தேன்

வளமுடன் நலமுடன் வாழ்கவென
வாழ்த்து சொல்லி முடித்தேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அழகு தமிழில் சொல்லுதிர்த்து
அம்மாவென முதலழைத்தாய்.
தளிர்நடைப் பயின்று - நீ
குமரியாய் கும்மாளமிட்டு
இன்றோ
தலைவியாய், தாயாய்
வாழ்விலே அங்கமாய் தங்கமாய்
சுடரொளி வீசி சொலிக்கின்ற
உனதான நினைவுகளில்
ஊஞ்சலிடும் பிறந்தநாள்.

நலமுடனும் மகிழ்வுடனும்
இறைவனின் அருளுடனே,
வாழியே பல்லாண்டென 
வாழ்த்தினேன் அன்புடனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

==============================

========

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சிங்கத்தமிழ் நடைப்பயின்று
சிந்தனை சிற்பியாய்
சீர்கொண்ட வார்த்தைகளால்
சிறப்பதனை நீரடைந்து
சிகரத்தைத் தொட்டு விட,
சிறந்ததிந்த நன்னாளில்
உம் பிறந்த இந்நாளில்
உமையே வாழ்த்தினோம்
வாழியே நலமுடனும் மகிழ்வுடனும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

==============================

======

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


அன்பாய் நட்பாய் மகிழ்வாய்.
நலமாய் வளமாய்
ஆண்டுகள் பல கடப்பினும்
இனிக்கின்ற நினைவுகள்
நாள்தோறும் சூழ்ந்து வர
வாழ்த்தினோம் உமை
நினைவுகள் நீந்துகின்ற
சிறப்பான  இந்நாளில்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விழி பிதுங்கி நிற்குதடா
விரிந்த எம் விழிகளும்
பட்டாம்பூச்சியாய் பறக்கும்
இக்குலவிளக்கு யாரோ?

தெரிந்தாலும் என் மனது
அறியாமல் கேட்குதடா.
போற்றுதலுக்குறிய பெண்மணியாய்
பல்லாண்டுகள் நலமாய் வாழ
தயக்கமின்றி இந்நன்னாளில்
வாழ்த்துகிறது எம்முள்ளம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  

==============================

====

Tuesday, September 20, 2016

ஏன்? - குறுங்கவிதைகள்

ஏன்
பழங்கனவாய் ஆனபோதும்
மீண்டும் மீண்டும் ஏன் முயற்சிக்கிறேன்
பசலையாய் உன் மேல் படர
உன் ஆண்மை அழுத்தத்திலா
நீ காட்டிய பாச உணர்விலா

------

நானே

என் கண்களை
குத்திக் கொள்கிறேன் 
உன் 
அழகிய விரல்களால்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

உள்ளத்தில் மகிழ்வுடன் நீரிருக்க
நாளும் நலனுடன் உடலிருக்க
இறைவன் அருளும் உமக்கிருக்க
அன்புடன் வாழ்த்துக்கள் குவிந்திருக்க
அதிலொன்றாய் எமதிருக்க
அலையோடும் இணையத்தில் யாம் வந்தோம்
நினைவோடும் உம் உள்ளத்தில் எமை பதிக்க

இனிய பிறந்தநாள்  நல்வாழ்த்துகள் நண்பரே


 

வாழ்த்துகள்

விடியாத பொழுது
விடிந்ததாய்
நினைத்தது
அவன் வாழ்க்கையல்ல,
"இரவு"

இனிய நாள் வாழ்த்துகள் நண்பர்களே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

உள்ளத்தில் மகிழ்வுடன் நீரிருக்க
நாளும் நலனுடன் உடலிருக்க
இறைவன் அருளும் உமக்கிருக்க
அன்புடன் வாழ்த்துக்கள் குவிந்திருக்க
அதிலொன்றாய் எமதிருக்க
அலையோடும் இணையத்தில் யாம் வந்தோம்
நினைவோடும் உம் உள்ளத்தில் எமை பதிக்க

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே 

Monday, September 19, 2016

நீ




உடனீிருக்கிறாய்
என்ற நம்பிக்கையில்
மீண்டும் துளிர்க்கிறேன்.
ஆனால்
யாரும் உடனில்லை
என்ற அவநம்பிக்கையில்
கருகுகிறாய் நீ.

உன்னை

உன்னை

நம்மிடையே ஒலியலைகள்
தடைப்பட்ட நிலையில்
என் விழியலைகள் மட்டும்
ஒரு தலையாய்
மோதலின்றி தழுவுகிறது
சமயம் வாய்க்கையில்

%%%%%%%%%%%%

ஒரு முறை தான், உன்னை
நகலெடுத்தேன் விரல் நுனியில்.
நாட்கணக்கில் ஆனாலும்
அசராமல் குடியிருக்கிறாய்
வேறு நகல் எடுக்காத வரை.

"டச் போன் தகவல்"
என்ன கொடுமை இந்த இந்திய நாட்டில்
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண்ணுக்கு, " ஏ" கிரேட் அரசு வேலையுடன், பதிமூன்று கோடி பரிசு தொகையும் வழழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கபதக்கம் வென்றுள்ள மாரியப்பனுககு வெறும் இரண்டு கோடி பரிசு பணம் வழங்கப்பட்டுள்ளது. இவர் பட்டப்படிப்பும் படித்துள்ளார். வேலையும் வழங்கப்படவில்லை.


https://scontent.fsnc1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14292498_1265325203507119_6618101653463892606_n.jpg?oh=6b960f3d7f9b15c1f4379e334260c5f6&oe=5883E704

முடிவு


தன் பணிகளை
சரியான நேரத்தில்
முடிப்பவன் கூட
தளர்ந்து விடுவான்
தனக்கான
முடிவை அறிந்தால்


வாழ்த்துகள்

தோல்வி என எதை நினைக்கிறாயோ.
அது தோல்வியில்லை.
வெற்றி என எதை நினைக்கிறாயோ
அது நிலையில்லை.
வாழ்த்துகள் நண்பர்களே!

Saturday, September 17, 2016

போனதெங்கே? - 8



அடுக்கினேன் என்னுள் அழகாக
புரட்டினேன் தினமும் வாசிக்க
எழுத்துக்களால் ஓவியம் நான் வரைய
மகிழ்வுடன் நீயும் உடனிருந்தாய்.

கருத்துருவெல்லாம் உனை காட்ட
மூழ்கிட வைத்தாய் எனை மறந்து.
ஏச்சுக்களும் பேச்சுக்களும் சுட்டெரிக்க
அத்தனையும் சுகமாய் நாம் ரசித்தோம்.

உரைகளுக்கு நாமும் உயிர் கொடுத்து
நினைவுடன் என்றும் உறவாடி,
நட்பெனும் உரிமையுடன் கை கோர்த்து
விழிகளில் தினமும் கதை படித்தோம்.
     
காலடியில் உலகம் சுழன்று ஓட
சுற்றி வந்தோம் நம்மை மறந்து.
சந்திக்கும் நேரத்தில் வாய் திறந்தோம்
தனிமை நிலையில் நம்மை மறந்தோம்.

தூதுக்கு அனைத்தையும் அணுகியபடி 
அந்தியை நோக்கி தவமிருந்தோம்.
மனத்துக்குள் சுமையை ஏற்றி விட்டு
முழுமையாய் மறைந்து போனதெங்கே?

--

ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

ஓ......, குட்டிக்கவிதைகள்


ஓ....... குட்டிக்கவிதைகள்


இவன்

மறந்து போன 
கவிதையை,
மீண்டும் 
எழுத துடிக்கிறான் 

###############

இதயத்தில் குடி வைக்க
முயல்கிறேன், 
உன்னை
எழுத்தில் சிறைப்பிடித்து.

*********************

ஏனோ
சமிக்கைகள் 
செயலற்று போகிறது 
தேவைபடும்
சமயத்தில்.

+++++++++++++++

"நீச்சல் "

அனுபவம் 
மறந்து
கத்துக்குட்டியாய்

~~~~~<~~~~~~~~

"யோசனை"

ஓரெழுத்து எழுத
ஓராயிரம் 

><><><><><><><

"போட்டி"

உருட்டி பார்க்க 
பகடைக்காய்
உங்களுக்கும்
எனக்குமா?

^^^^^^^^^^^^^^^^^

"உயிர்"

கல், மண்னென
அத்தனைக்கும்,
உன் வாயிலிருந்து 
உதிரும்போது

=================

"புரியாமல்"

மாடிப்படி, மலைப்படி
அப்படி, இப்படி 
அதிலொன்று தானோ?
மண்டகப்படி

^^^^^^^^^^^^^^^^^

உணர்வுகளுமில்லா,
உற்சாகமில்லா
உன் அணைப்பில்
தெரிகிறாய்
"தானியங்கியாய்"

)()()()()()()()()()()()()()()()()()(



ஓ....
இப்படியும் ஒரு பாடமா?
இருக்கிறதா படிக்க?

ஆக்கம்:
உங்கள் தவப்புதல்வன் 


Friday, September 16, 2016

"குடைச்சல்" - குட்டிக்கவிதைகள்

"குடைச்சல்"

அனலாய் நீயிருந்து
அடங்கிப் போக,
அடங்கியிருந்த  மனது
அனலாய் கொதிக்கிறது.

($)($)($)($)($)($)($)($)($)

"பருவ காலம்"

அன்று
புளிப்பும் இனித்தது
இன்று
இனிப்பும் புளிக்கிறது
/&/&/&/&/&/&/&/&/&/

"குப்பை"

மனமும் உடலும்
சுவைத்த காலம்
கரைந்தது வெள்ளத்தில்
கரையோரம் குப்பை மட்டும்

@@@@@@@@@@@@@@@


"புளிக்கிறது பால்"

பழக, பழகவா?
பருக, பருகவா?

=+====+====+====+=

கல்லிலும் முள்ளிலும்
நடை பயன்ற கால்கள்
தடுமாறுகிறது
நல்ல சாலையில்

€€€€€€€€€€€€€€€

தொலைத்து விட்டேன்
தொலைந்த நான்
எங்கே நாம்?

£££££££££££

உன் அலையோசை
என் நெஞ்சில் ஒலிக்க,
என் அலையோசை
ஒலிக்கிறதா உன் காதில்?

¥¥¥¥¥¥¥¥¥•¥¥¥¥¥¥¥

வானத்தில்
சுற்றிய காதல்
இன்று
வனவாசத்தில்

000000000000000000

ஏனிந்த?



என்னுடுப்பை 
பெண்ணுடுப்பென
தூக்கியெறிந்தாயே
உன்னுடுப்பில் இருந்ததற்கு.
பெண்ணென உறுத்தவில்லையா
என்னுடன் கலந்தபோது.

Thursday, September 15, 2016

வார்த்தைகளால் தாலாட்டி ...




சிக்கலில்லா மனங்கொண்ட
பள்ளி இளமாணாக்கர்
பண்புடன் செயலாற்ற
அழகு மிகு கருத்துக்களை
நயம் மிக்க கவிப் புனைந்து (கவி வழி கருத்துக்களை,)
நாட்டியமாய் அதையமைத்து
இனிமையான இசைக்கூட்டி
ஆழமாய் பதித்திட்டார்
அறிவிலே சிறந்தோங்க.


இதமாய் நுழையும்
இயல்பாய் பதியும்
இசையில் கலந்து
இயம்பிய தகவல்.

இளம்பிராயத்தில்
இனம் கண்டு வளர
கரு கொள்ளும் எண்ணங்கள்
உருக் கொள்ள செய்து

வளர்பிறை மாணாக்கரை
வாஞ்சையுடன் சேர்த்தணைத்து
சீர் கொண்ட வழிகளில்
கனவுகளை செயலாற்ற

அழகு தமிழ் சொற்கொண்டு
சிறப்பாய் அமைத்திட்டால்
அத்தனையும் பொன்னாகும்
மாணாக்கர் கண்ணாவார்.

Sunday, September 11, 2016

வணக்கங்கள்



சிக்கென்ற உடலுடன்
சிலுசிலுக்கும் மனமுடன் 
சிந்தனையில் உயர்வளிக்கும் 
சிறப்பான வருடமாய் இதுவமைய ..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

============================

ஆண்டவன் அருளால்
நலன்கள் கூடி
மகிழ்வாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

================================



வாழ்த்துக்களால் மனங்கள் இணைந்து
மகிழ்வாய் வாழ அன்புடன் இசைத்தோம்
மகிழ்வுடன் யாமும்.

 நட்புக்கு நலனான நாளாய் திகழ பிராத்திக்கிறேன் ஐயா.

===========================

மகிழ்வாய் வாழ அன்புடன் இசைத்தோம் நாளில்
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பரே.

================================

வாடிய பயிரை கண்டு  நான் 
தலையில் வைத்தேன் கையையன்று .
சோற்றுக்கே வழியின்றி
எதில்  வைப்பேன்  கையையின்று. 

இனிய மாலை  வணக்கம் அருமை நண்பரே.




========================

சுகமான நித்தரையில் ஆழ்ந்த இவ்வுடல்
சுறுசுறுப்பாய் இயங்கட்டும் நண்பரே.
மனம் திறந்த நட்புகளுக்கு,
மகிழ்வான வணக்கங்கள்

==========================


கண்ணாமூச்சி காட்டுகிறது
நாட்களோ எப்பொழுதும்,
ஓடிபிடித்து விளையாடுவோம்
அத்துடன் சேர்ந்துக் கொண்டு.

மகிழ்வான வணக்கங்கள்



==========================

பழசாக, ஆகாக  மெருகேறும்.
மகிழ்வான வணக்கங்கள்







மகிழ்விக்க



நானொரு கவிஞனில்லை
அருவியாய் கவி பொழிய.
மழைச்சாரலால்
மலைச்சாரலில்
ஓடையது நூலிழையாய்
ஓடிவரும் சிறுபொழுதில்
நனைந்து நான் குதுகளிப்பேன்
நாடிவரும் உமை மகிழ்விக்க.

Saturday, September 10, 2016

வேகாமல் போகுமா?

உன்னிடம் எதைக் கண்டான் 
மயக்கத்தில் அவன் கிடைக்க,
புரியாத புதிராக உனை நினைத்து 
புதையலையா தேடியலைந்தான் 
அறிவில்லா ஜடத்திற்கு 
அறிவூட்டி என்ன பயன்?
பாடங்கள் பல புகட்டினும் 
பாடையில் போகும் நேரமிது 
ஆசைகள் பல நூறு 
அவனிலும் ஆட்டி வைக்க,
அவஸ்த்தையில் கிடப்பானோ 
ஆயுள் முடியும் வரை 
வேகாமல் போகுமோ 
வெற்றுடலும் சுவாலையில் 

அவனொரு முட்டாளுங்க!

 

#உறவுகளுக்கிடையேயே அன்பையும், பாசத்தையும் பேணிக் காக்க தெரியாதவன், நண்பர்களிடம் நட்பை நிரந்தரமாக எப்படி காப்பான்?

இனிய நாள் நல்வாழ்த்துகள் நண்பர்களே!

Wednesday, September 7, 2016

இப்படி ஒரு கொடுமை - ஒரு சின்ன கதை





ஒரு ஊரில் ( இது இல்லாம ஆரம்பமே கிடையாதே ) ஒரு கணவன் மனைவி. மனைவி மிகமிக நல்லவள், அனைவரிடத்திலும்  நல்ல பெயரும், திறமைசாலியென பாராட்டும் உண்டு. கணவனுக்கு இல்லாத தீயபழக்கங்கள் என்று சொல்லக்  சொல்லக்கூடிய அளவுக்கு ஏதுமில்லாவிட்டாலும், முட்டாள், முன்கோபியென அடைமொழியும் உண்டு.

அவன் மனைவி எவ்வளவோ புத்திமதி கூறினாள். எடுத்துரைத்தாள். எனக்கு நீ கணவனாக இருக்க தகுதியற்றவன் என நேரடியாகவே கூறி பார்த்தாள். இடத்துக்கு ஏற்றபடி அவனை உயர்வாக நடத்துவது போலவும், அவன் மேல் மிகுந்த கரிசனம் உள்ளவள் போலும் நடந்துக்க கொண்டாள்.

ஆனால் இத்தனையிருந்தும் அவன், கடவுள் அவனுக்காக படைத்து அனுப்பிய ஒரு தேவதையென்றே அவளைக் கருதினான், அவள் அவனை பழித்து பேசியபோதெல்லாம், அவளை விட உயர்வாக இல்லாவிட்டாலும், சரிசமமாகவாவது தான் இருக்கவும், பெயரெடுக்கவும் தன்னால்  முடியவில்லையே என தனக்குள் நாளுக்கு நாள் முடங்கி போகிறான். ஆனால் அவள் மேல் அளவற்ற அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறான். தன்  உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவனாகவும், அதை சொல், செயல்வடிவில் காட்டும்போது நடிகனாகவும், ஏமாற்றுதாரியாகவும் கருதப்படுகிறான்.

ஒரு சமயம் கடவுள் தனக்கு தேவதையையே மனைவியாக கொடுத்தாரே என மகிழ்ச்ச்சி அடைந்தாலும், மற்றொரு சமயம் தகுதியில்லா தனக்கு தேவதையை கொடுத்து, அத்தேவதைக்கு  துன்பமும், கொடுமையுமிழைத்து விட்டாரே என வருத்தப்படவும் செய்கிறான்.  


#பாவங்க! அவளும், அவனும். அன்பை பரிமாறிக் கொள்ளத் தெரியாமல், பழங்கதை பேசி நிகழ்காலத்தை வீண்டிக்கிறாங்க.

யாரிவன்?



பாசத்திற்காக 
மனைவியிடமும்
கெஞ்சும் 
அவனெரு 
கோமாளியா?
ஏமாளியா?   

Monday, September 5, 2016

சித்தம்

   

உன் கண்ணீர் துளிகளுக்கு,
யாரும் சொல்ல தேவையில்லை 
அவன் காரணமென.
அதை உணரும்போது
காலசுவட்டில்  கரைந்திருப்பது
அவனா, நீயாவென தெரியாது. 

Thursday, September 1, 2016

பாவம்



குளிரது தாக்காமல் 
அவனுக்கவள் போர்த்தினாள் 
நிரந்தரமாய், 
உறங்கியதை அறியாமல்.


மகிழ்வான நாளாகட்டும் நட்புகளே! 

அனுபவம் - இன்றொரு தகவல்



ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது முன்னோர்கள் வாக்கு.
வளைக்க, வளைய வேண்டிய வயதில் நோய் தாக்க, நிற்க வைக்கவே பெரும்பாடு பட்டனர் எம் பெற்றோர்.
ஒரு வழியாய் பன்னிரண்டு வயதில் நிற்க, நடக்க தொடக்கம். மாற்றுத்திறனாளியானதால் கண்டிப்பும், தண்டிப்பும் பள்ளியிலும் மனையிலும் இல்லாமல் போனதால் வளையவுமில்லை, அதை உணரவுமில்லை.
உணர்ந்து வளைய முயற்சித்த போது, உடைந்தது நான் மட்டுமல்ல.


நலமான நாட்களாகட்டும் நண்பர்களே!