Translate

Wednesday, September 7, 2016

இப்படி ஒரு கொடுமை - ஒரு சின்ன கதை





ஒரு ஊரில் ( இது இல்லாம ஆரம்பமே கிடையாதே ) ஒரு கணவன் மனைவி. மனைவி மிகமிக நல்லவள், அனைவரிடத்திலும்  நல்ல பெயரும், திறமைசாலியென பாராட்டும் உண்டு. கணவனுக்கு இல்லாத தீயபழக்கங்கள் என்று சொல்லக்  சொல்லக்கூடிய அளவுக்கு ஏதுமில்லாவிட்டாலும், முட்டாள், முன்கோபியென அடைமொழியும் உண்டு.

அவன் மனைவி எவ்வளவோ புத்திமதி கூறினாள். எடுத்துரைத்தாள். எனக்கு நீ கணவனாக இருக்க தகுதியற்றவன் என நேரடியாகவே கூறி பார்த்தாள். இடத்துக்கு ஏற்றபடி அவனை உயர்வாக நடத்துவது போலவும், அவன் மேல் மிகுந்த கரிசனம் உள்ளவள் போலும் நடந்துக்க கொண்டாள்.

ஆனால் இத்தனையிருந்தும் அவன், கடவுள் அவனுக்காக படைத்து அனுப்பிய ஒரு தேவதையென்றே அவளைக் கருதினான், அவள் அவனை பழித்து பேசியபோதெல்லாம், அவளை விட உயர்வாக இல்லாவிட்டாலும், சரிசமமாகவாவது தான் இருக்கவும், பெயரெடுக்கவும் தன்னால்  முடியவில்லையே என தனக்குள் நாளுக்கு நாள் முடங்கி போகிறான். ஆனால் அவள் மேல் அளவற்ற அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறான். தன்  உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவனாகவும், அதை சொல், செயல்வடிவில் காட்டும்போது நடிகனாகவும், ஏமாற்றுதாரியாகவும் கருதப்படுகிறான்.

ஒரு சமயம் கடவுள் தனக்கு தேவதையையே மனைவியாக கொடுத்தாரே என மகிழ்ச்ச்சி அடைந்தாலும், மற்றொரு சமயம் தகுதியில்லா தனக்கு தேவதையை கொடுத்து, அத்தேவதைக்கு  துன்பமும், கொடுமையுமிழைத்து விட்டாரே என வருத்தப்படவும் செய்கிறான்.  


#பாவங்க! அவளும், அவனும். அன்பை பரிமாறிக் கொள்ளத் தெரியாமல், பழங்கதை பேசி நிகழ்காலத்தை வீண்டிக்கிறாங்க.

No comments: