Translate

Showing posts with label ஜெயா டிவி மக்களரங்கம். Show all posts
Showing posts with label ஜெயா டிவி மக்களரங்கம். Show all posts

Thursday, February 19, 2009

வணங்கியே வாழ்த்துகிறோம்.

நிகழ்ச்சிகளை காணவே
தொலைகாட்சி ஒன்றிருக்க.

வாரிசுகள் முறையிலே
அவர்களோ முன்னிருக்க,

மனைவியென்ற பெயரிலே
இணைந்தவளோ அடுத்திருக்க,

தலைவனென்ற சொல்லாலே
அடுத்ததாய் நானிருக்க.

வாய்ப்புகள் கிடைத்தாலே
கண் பதிப்போம்
செவிமடுப்போம்
உமதந்த ''மக்களரங்கத்திலே''.

நாட்கள் சில முன்னாலே (28\12\08)
பெங்களூரு அரங்கத்திலே,
சேவையென்ற தலைப்பிதிலே,
முதலுரைத்த அம்மாவின்
பெயரை யாம் அறியோமே.

தம்பதிகள் இருவருமே
இணைந்திருந்து, செய்யும் 
சேவைகளைச் சொன்னாரே
செய்திகளாய் பலவற்றை.

உள்ளம் உருக
கேட்டுணர்ந்தோம்.
கண் பனிக்க
பார்த்திருந்தோம்.

கைகளோ தன்னாலே
கைகொட்டி ஆர்பறிக்க,
மனமோ மிதந்தது
மகிழ்ச்சியில் தன்னாலே.

சேவைகள் என்றாலே
பெரிதாக தேவையில்லை.
தேவைப்படும் நேரத்திலே
சிறிதாக இருந்தாலும்
செய்தாலே பெருமையப்பா.

நீண்டவாழ்வு இருந்தாலே
சேவை மேலும் தொடருமென்று,
மனமாற வேண்டிக் கொண்டோம்
உடல் நலனை வழங்கவென்று.


அன்புடன்,
ஏ.எம்.பத்ரி நாராயணன் (எ)
தவப்புதல்வன்.
06\ 01\2009





பின் குறிப்பு 
               தங்களை தொடர்புக் கொள்ள சரியான முகவரி இன்மையால், மேற்கானும் கவிதையை  ''மக்களரங்கம்'' ஜெயா டீ.வி அலுவலக முகவரியிட்டு அஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தேன். தங்களை வந்தடைந்ததா என்பதை அறிய இயலா நிலையால் ஓரிரு வார்த்தைகளிலாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் இந்த வலைமுகவரி மூலமாக அனுப்பியுள்ளேன்.  அ.மா.ப. 09\02\2009. 

மீண்டும் ஒரு பின் குறிப்பு
          திரு.விசு அவர்களிடமிருந்து பதில் கடிதம்  கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

உமதும் ஒரு தொண்டு தான்.

மக்களரங்க நிகழ்ச்சிகளோ
உம் அருகில், எமை இழுக்கும்.

செய்திகள் பலர் சொல்ல
செவிமடுக்க செய்தீரே.

வாய் விட்டு சிரித்திடவே
வாய்ப்புகள் தந்தீரே.

உறவுகளின் பெருமைதனை 
உளமறிய செய்தீரே.

சேவைகள் விரிவடைய 
செயல்படுத்த முனைந்தீரே.

சாதனைகள் செய்தாரை
ஊக்கமடைய செய்தீரே.

எமைப் போன்றே பலரையும்
ஏக்கமடைய செய்தீரே.

சிறந்த நிகழ்ச்சிகள்  பலயிருக்கும்,
அதிலொன்றாய் உமதிருக்கும்.

சேவையென கொண்டாலே
உமதும் ஒரு சேவைதான்.

இனிதாய் என்றும் தொடர,
இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்,

A.M.பத்ரி நாராயணன் என அழைக்கபடும்
தவப்புதல்வன்.
06/01/2009.