நிகழ்ச்சிகளை காணவே
தொலைகாட்சி ஒன்றிருக்க.
வாரிசுகள் முறையிலே
அவர்களோ முன்னிருக்க,
மனைவியென்ற பெயரிலே
இணைந்தவளோ அடுத்திருக்க,
தலைவனென்ற சொல்லாலே
அடுத்ததாய் நானிருக்க.
வாய்ப்புகள் கிடைத்தாலே
கண் பதிப்போம்
செவிமடுப்போம்
உமதந்த ''மக்களரங்கத்திலே''.
நாட்கள் சில முன்னாலே (28\12\08)
பெங்களூரு அரங்கத்திலே,
சேவையென்ற தலைப்பிதிலே,
முதலுரைத்த அம்மாவின்
பெயரை யாம் அறியோமே.
தம்பதிகள் இருவருமே
இணைந்திருந்து, செய்யும்
சேவைகளைச் சொன்னாரே
செய்திகளாய் பலவற்றை.
உள்ளம் உருக
கேட்டுணர்ந்தோம்.
கண் பனிக்க
பார்த்திருந்தோம்.
கைகளோ தன்னாலே
கைகொட்டி ஆர்பறிக்க,
மனமோ மிதந்தது
மகிழ்ச்சியில் தன்னாலே.
சேவைகள் என்றாலே
பெரிதாக தேவையில்லை.
தேவைப்படும் நேரத்திலே
சிறிதாக இருந்தாலும்
செய்தாலே பெருமையப்பா.
நீண்டவாழ்வு இருந்தாலே
சேவை மேலும் தொடருமென்று,
மனமாற வேண்டிக் கொண்டோம்
உடல் நலனை வழங்கவென்று.
அன்புடன்,
ஏ.எம்.பத்ரி நாராயணன் (எ)
தவப்புதல்வன்.
06\ 01\2009
பின் குறிப்பு
தங்களை தொடர்புக் கொள்ள சரியான முகவரி இன்மையால், மேற்கானும் கவிதையை ''மக்களரங்கம்'' ஜெயா டீ.வி அலுவலக முகவரியிட்டு அஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தேன். தங்களை வந்தடைந்ததா என்பதை அறிய இயலா நிலையால் ஓரிரு வார்த்தைகளிலாவது பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் இந்த வலைமுகவரி மூலமாக அனுப்பியுள்ளேன். அ.மா.ப. 09\02\2009.
மீண்டும் ஒரு பின் குறிப்பு
திரு.விசு அவர்களிடமிருந்து பதில் கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.
No comments:
Post a Comment