கூறு போட வந்தவரை
கூண்டோடு விரட்டி விட
கண்ணாய் இருந்தாய், இந்நாட்டின்
கன்னியத்தைக் காத்திடவே.
களம் புகுந்த உன்னை- அவன்
காலனிடம் அனுப்பி விட்டான்.
நாங்கள்
ஓய்ந்திருந்த நேரத்திலும்
ஓயாமல் கண் விழித்தாய்.
விழித்த விழி மூடி விட்டாய்
விழிகளையே நிறைத்து விட்டாய்.
கண் கலங்கி நிற்கின்றோம்
தாக்கத்தை உணர்கின்றோம்.
உனையிழந்த நேரத்திலே
யாரைத்தான் குற்றம் சொல்ல?
நினைவுகள் உள்ளவரை
நினைவுகளில் நிறைந்திருப்பாய்.
மற்றொரு நேரமதில்
இந்நிலை நேராமல்
முனைப்புடன் இருந்திடவே,
அருவமாய் இருந்தாலும்
வழி நடத்திக் காப்பாயே.
காப்பவரை கடவுளென்போம்
ஆம்! நீயும் கடவுள் தான்!!
காத்தாயே இந்நாட்டின்
கவுரவத்தை.
பின் குறிப்பு
சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே தாக்குதல்- அஞ்சலி'' தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...
No comments:
Post a Comment