Translate

Monday, February 16, 2009

பாரதத்தின் வீரம் - மறைந்த வீரருக்கு அஞ்சலி

பாரத நாட்டை உருகுலைக்க,
புழக்கடை வழியே உள்நுழைந்தார்
முதுகெலும்பற்ற கோழைகள்
நேருக்கு நேர் மோத வீரமின்றி.

ஒன்று பட்ட பாரதத்தை
சீண்ட பார்க்க (துண்டாட) நினைக்கின்றார்.
பாரதத்தின் வலிமைதனை
உணர்ந்திருப்பர் இந்நேரம்.

கிழக்கு மேற்கு என்றில்லை
வடக்கு தெற்கு என்றில்லை
ஒன்றுபட்ட பாரதமே
வலிமையான பாரதம்.

புரிந்து கொள்ளா மூடர்களுக்கு
காலம் சிறிது ஆகலாம்.
என்றுமே இணைந்திருப்போம்
திறமைதனை காட்டியே.

வாலாட்டி பார்க்கின்றார்
வலிமைதனை அறியாமல்.
முழுமையாக நறுக்கிடுவோம்
எங்கும் இதுபோல் முளைக்காமல்.

நறுக்கிடும் வேலையிலே
இன்னுயிர் ஈந்தீரே!
கண்களில் அருவியாக,
உம் செயல்களின் நினைவாக,
கவிதைகளாய் பொழிந்தோமே
உமக்கு அஞ்சலி செய்திடவே.


பின் குறிப்பு
      சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்'' ''அஞ்சலி''  தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன்.  வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...

No comments: