விரோதிகளை ஒழித்திடவே
வீரனாய் சென்றாயே!
முன்னின்று நடத்தினாயே
முனைப்பதனைக் காட்டி.
மெல்ல மெல்ல அடி எடுத்தாய்
முன்னோக்கி நகர்ந்து சென்றாய்
பீடைகளை ஒழித்து விட்டு,
பிணைகளை மீட்க.
வெடிகளின் வேகத்தால்
வெட்டுண்ட உம் உடலை
கண்டுத்தான் துடித்து விட்டோம்
காது கொடுக்க முடியாமல்.
வாசித்த செய்தியெல்லாம்
நெஞ்சையே பதற வைக்க
வாய் விட்டு கதறி விட்டோம்
கொடியவரின் செயலைக் கண்டு.
மனத்தில் ஏறிய பாரத்தினால்
மருகித்தான் நின்று விட்டோம்.
கண்ணில் வழிந்த நீரையே
காணிக்கையாக சமர்ப்பித்தோம்.
மண்ணுலகில் எந்நாளும்
மங்காத புகழ் கொண்டு வாழ்வாயே!
இந்நாட்டு மக்களுக்காக
இன்னுயிரை ஈந்த நீயே.
உன்னை நினைத்து
சபதமேற்போம்,
அஞ்சாமல் அசராமல்
நம் நாட்டை காக்க!
பின் குறிப்பு
சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்'' அஞ்சலி'' தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...
No comments:
Post a Comment