பாவியவன்,
பாலூட்டி வளர்த்த தாயை
பாலூற்ற வைத்து விட்டான்.
பயங்கர வாதத்தினால்
பாகுபாடு செய்து - அவன்
பங்கு போட நினைத்து விட்டான்.
பாரத தேசந்தனை
பந்தாடி பார்த்திடவே,
கூறு கெட்ட மனங்களினால்
கூறு போட, அனுப்பட்டு
கொன்றுத்தான் குவித்தானே
கொலைக்காரன் - உன்னையும் சேர்த்து.
ஊணென்றும் உறவென்றும்
உணர்வுகளைக் கொள்ளாமல்
உரிமையான நாட்டைக் காத்திடவே
உழைத்த உன்னை
உருகுலைய செய்து - அவன்
உலையிலே போட வைத்தான் (னே)
உனைப் பெற்ற இதயங்களின்
உள்ளக் குமறல்களை
எதைச் சொல்லி ஆற்றிடுவேன்!
எதைச் சொல்லித் தேற்றிடுவேன்!!
பின் குறிப்பு
சென்ற வருடம் 2008 நவம்பர் மாதம் மும்பே மாநகரில் நடந்த நாசகரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் மூலமாக நடைப்பெற்ற அஞ்சலி கவிதைப்போட்டிக்கு நான்கு கவிதைகளை அனுப்பியிருந்தேன். அதை ''மும்பே நாசகரத் தாக்குதல்'' அஞ்சலி'' தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துக்களை நிரப்புவீர்கள் என்ற நம்பிக்கையில்...
No comments:
Post a Comment