Translate

Saturday, February 3, 2018

இடைவெளி_ஏனோ என்_ரதி!!


உன் விழிகளைக் கண்டதில்
நான் மட்டுமென நினைத்திருந்தேன்.
களவாடினாய் எனையுமென
காட்டியதே உன் விழிகள்
மீண்டுமதை.
அன்றே சரணடைந்தோம்
ஒருவருக்குள் ஒருவராக.
காதலால் கட்டுண்டோம்.
கனவுகளில் கலந்திருந்தோம்.
கற்பனையில் வார்த்தெடுத்தோம். 22

பூங்காக்களின் இருக்கைகள், - நமை
சுமந்ததே மகிழ்வாக.
பிரிந்து செல்ல மனமின்றி
தென்றலதும் சுற்றியதே. 35
அத்தனையும் மறந்து விட்டு
இடைவெளி நீ கொடுத்ததேன்?
காத்திருக்கும் கண்களோ கனலாய் எரியுதடி,
கனவுகளிலும் நமையின்றி வேறுருயில்லையடி.
தனிமையில் நான் தவித்திருக்க,
இடைவெளி கொடுத்து நிற்பதேன்?
சுனக்கமது நீ கொள்ள,
சுமந்திருக்கும் செய்தியென்ன? 59
மடையதை நீ திறந்தால்
விடையதை நான் அளிப்பேன்.
அலைப்பேசி ஒலித் தடையாக,
குறுஞ்செய்தி விரைந்தளிப்பேன்.
விழிகளை ஓட்டாமல்
குப்பையில் வீசிடாதே. 74
மகிழ்வான செய்தியினை
எடுத்தியம்பட்டும் என் கைப்பேசி?

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
ந்திரோதயம்🙏சந்திரோதயம் முகநூல் குழுவில் பதிக்கப்பட்டது.

No comments: