Translate

Wednesday, February 21, 2018

நினைவிலென்றும் ஊஞ்சலாடும்



பசுமையான இடமிது.
தென்னை மரத் தோப்பிது.
காவலுக்கு நான்றிருக்க
கட்டி வைத்த குடிசையிது.

மண்சாந்து நான் அரைத்து
மணக்குமந்த சுவர் வைத்தேன்.
கூரையைத் தாங்கி நிற்க,
மூங்கில்களால் சட்டமிட்டேன்.

குளிருக்கு இதமாக,
மழைக்கோர் தடுப்பாக,
ஓலைகளால் போர்த்தியதை
கோரையால் கூரையிட்டேன்.

அமுதகான ஒலிகளெல்லாம்
காற்றினிடையே. அலை பாய,
ஆனந்தமாய் குடியிருக்க
அழகான குடிசையிது.

நகரத்து இரைச்சல்களும்
நாகரீக வேசங்களும்
நாடாத யிடமிது.
நாட்டுப்புறமும் இதுவின்றி
நழுவிக்கொண்ட இடமிது.

பரப்பரக்கும் நிகழ்வுகளில்லை.
வேடமிடத் தேவையில்லை.
வெட்டிப்பேச்சுக்கு இடமில்லை.
வேலைக்கு ஒன்றும் குறைவில்லை.

அனுபவித்தால் தெரியுமந்த
அற்புத நிலையிங்கு.
விட்டு போக மனமின்றி
விடைப்பெறுவர் சொத்து சேர்க்க.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: