ஒரு நாள் செல்லிடை பேசியில் எமக்கொரு அழைப்பு. சேலம்
மாவட்ட எடப்பாடி என்ற ஊரிலிருந்து பேசுவதாகவும், பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள,
வெளியே
சென்றுவர இயலாநிலையுடன் சக்கர நாற்காலி
துணையாக கொண்டு இயங்குகின்ற, கால்கள்
செயலாற்ற ஒரு மாற்றுத்திறனாளி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட குமார்,
ஒரு பழைய கணினி ஒன்றை நண்பரொருவர் அன்பளிப்பாக கொடுத்திருப்பதாகவும், இணைய இணைப்புக்காக
‘’டேட்டா கார்டு’’ ஒன்று கிடைத்தால்
மிக்க உதவியாக இருக்குமென வேண்டுகோள் விடுத்தார்.
எமது மூலம் இச்செய்தியை அறிந்த
முகநூல் நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியர் அவர்கள் தன்னிடமிருந்த ‘’டேட்டா கார்டு’’ஐ
தனது தாயார் மூலம் மகிழ்வுடன் வழங்கினார்.
#அவருக்கு நமது மனமுவந்த வாழ்த்துக்களை பகிர்வோம் நண்பர்களே.
*புகைப்படத்தில்: நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியரின் தாயார்
அவர்கள் வழங்க, குமாரின் அப்பா பெற்றுக் கொள்கிறார்.
No comments:
Post a Comment