Translate

Monday, March 23, 2015

காக்குமா குடி? தேவையா இது?

புண்பட்ட மனமென 
குடித்து தீர்த்தாய்.
புண்பட்ட குடலுக்கு 
எதை குடிப்பாய்?

தீராத தாகமென 
குடித்துத் தீர்த்தாய்.
தீர்ந்த உன் சொத்துக்களை 
எப்படி சேர்ப்பாய்?

விலகா இருள் நேரத்திலும் 
தெளியா புத்தி மயக்கத்தில் 
புரண்டுக் கொண்டிருந்தாய் 
சாக்கடையின்  ஓரத்தில்.

தர்மவானாய் இருந்தாய் 
மது அருந்திய நேரத்தில்.
பிச்சைக்காரனாய் மாறினாயே 
மது தேவைப்பட்ட நேரத்தில்.

சல்லடையாய் உறுப்புக்கள் 
இரத்தத்தில் கலந்து,
இதயத்தில் புகுந்து, 
சிறுநீரிலும் வெளியேற வழியின்றி
அடைப்பட்ட  சாக்கடையாய் உடல்.

மது காசைக் கரைக்கும்,
மனத்தைக் கெடுக்கும்,
மானத்தை வாங்கும். - ஆனால் 
கொடுக்குமா நல்லதை.

கவிழாத தலை - இன்று 
கவிழ்ந்து போக,
பித்தம் தீர எதை தின்று 
புத்தி தெளிவாய்?

இதயம் ஒருநாள் 
இயங்கவே மறுநாள் 
மறந்தால் அந்நாள் 
காலடி மண்ணும் 
சொந்தமில்லை உனக்கு.




No comments: