Translate

Tuesday, March 31, 2015

விழாவிலே ஓர் அனுபவம் - இன்றொரு தகவல்



சென்ற மார்ச் 8ம் தேதி சேலத்தில் நடந்த மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழாவில், விழா குழுவினர் சார்பாக சீர்வரிசைகளுடன், தனிப்பட்டவர்களும் மணமக்களுக்கு நன்கொடையும், பரிசுகளும் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதுசமயம் என் இருக்கைக்கு பின் சிறிது தள்ளி ஒருவர் ஒரே மாதிரியான சில நூல்களை வைத்திருந்தார். பார்த்து விட்டு தருகிறேன் என சைகை மூலம் கேட்து வாங்கி, உள்ளடக்கத்தை பார்த்தபோது சிறு சிறு கதைகள் போல் தெரிந்தது. முதல் தலைப்பே ''கொசு''. விரைந்து கண்களை ஓட்டினேன்.

''கொசு''. சொல்வதுபோல் கதை. ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. பெண் கொசுக்களாகிய நாங்கள், எங்கள் இனப்பெருக்க முட்டை இடுவதற்காகவே, உங்கள் ரத்தத்தில் ஒரு துளியிலும் துளி அதற்கே இந்த அளறு அலறுகிறீர்கள். டெங்கு. சிக்கன்குனியா, பன்றி காய்ச்சல்,டைபாய்டு இப்படி பல பெயர்களில் உங்களுக்கு வரும் நோய்கள், உங்கள் இரத்தத்தில் உள்ள  தானே தவிர, எங்களிடம் எந்த கிருமியுமில்லை.

காற்றுக்காக ஓலை விசிறிகளை பயன்படுத்துவதை எல்லாம் விட்டு விட்டீர்கள். மின்சார பேட்டுகளையும்,  சுருள்களையும், மேட்டுகளையும், உங்களைப்போன்றே ஆண்டவன் படைத்த ஒரு உயிரினமான  எங்களை ஒழிப்பதற்காக பயன்படுத்துகிறீர்கள்.  காரணம் உங்கள் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. தேங்கியுள்ள சாக்கடை நீர், திறந்து வைத்துள்ள குடிநீர் உள்ளவரை உங்களால் எங்களை அழிக்க முடியாது. இப்படி மேலும் தொடர்ந்தது.

அதில் குட்டியாக ஒரு தகவல்: ஒரு குட்டிக்கொசு, தன்  தந்தையிடம் மகிழ்ச்சியாக வந்து, அப்பா... இன்று ஒரு வீட்டுக்கு போனேன். எனக்கு சரியான வரவேற்பு. நான் அங்கிருந்து வெளியேறும் வரை அனைவரும் கை தட்டிக் கொண்டேயிருந்தார்கள் என பெருமை பொங்க சொன்னது. அதற்கு தந்தை கொசு சொன்னது. அட மட செல்லமே, அவர்கள் உன்னை வரவேற்று கை தட்டவில்லை. அவர்களின் இராட்சக்கைகளால் உன்னை கொன்றுவிட பார்த்தனர். நல்ல வேளை உயிர் பிழைத்து வந்து விட்டாய் என கூறி அணைத்துக் கொண்டது.

#இது எப்படியிருக்கு நட்புகளே! குறுகிய நேரத்தில் விரைவாக வாசித்ததால், முழுமையாக கதையையோ, நூலின் பெயரையோ நினைவில் நிறுத்திக் கொள்ள முடியவில்லை.  பெயர் ''சாமி''
இனிசியலும் ஞாபகமில்லை..

#இக்குட்டி   கதை  என்ன சொல்லுது நட்புகளே.

No comments: