எங்கள் மகள் நிரஞ்ஜனா - ஆனந்தராஜ் அகஸ்ட் தம்பதியருக்கு ஆண் மகவு இன்று காலை பிறந்துள்ளது. அவர்களை வாழ்த்தி.

என்னுயிரும் துடித்தது

என்னுயிரும் துடித்தது
உன்னுயிர் பிறப்பெடுக்க,
வலியின் அலையோசை
எம் நெஞ்சுக்குள் ஊடுருவ,
மதி மயங்கிய உறக்க நிலை
எனை விட்டு தொலைந்ததம்மா.
அறியா நிலையினிலே
அரற்றிய பொழுதினிலே
ஆனந்தமாய் செய்தி வந்து
அமுதமாய் செவி தழுவ,
ஆண்டவனின் அருள் வடிவம்
உணர்வுகளில் தவழ்ந்ததம்மா.
உரக்கத்தான் கூவிவிட
தோற்குழிக்குள் சொல்லுறள,
மகிழ்விலே என் விழிகள்
மின்னலுடன் போட்டியிட
கூத்தாடிய எம்மனமோ
தவித்ததம்மா தனியாக.
தாயும் சேயும் நலமாக,
குடும்பமுடன் மகிழ்வாக,
இறை தந்த செல்வங்களுடன்
சகலமும் பெற்று நீங்கள்
சந்தோசமாய் மனம் நிறைந்து
சீராக வளர்ச்சிப் பெற
காணிக்கையாய் தாள் பணிந்தோம்
இறைவனின் காலடியில்.
--=
அன்பும் ஆசிர்வாதங்களும்
அப்பா.A.M. பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment